மருத்துவமனையில் இருந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பினார் ரிக்கி பாண்டிங்..!
நெஞ்சு வலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிக்கி பாண்டிங் குணமடைந்து, மருத்துவமனையிலிருந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பினார்.
ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் இடையே பெர்த்தில் நடந்துவரும் முதல் டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்துவருகிறார் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங். வர்ணனை செய்துகொண்டிருந்த ரிக்கி பாண்டிங்கிற்கு திடீர் நெஞ்சு வலி ஏற்பட்டதால் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லப்பட்டார்.
ரிக்கி பாண்டிங் நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது கிரிக்கெட் உலகில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. அவருக்கு மருத்துவர்கள் சிறப்பான சிகிச்சை அளித்தனர். இதையடுத்து குணமடைந்த ரிக்கி பாண்டிங், மருத்துவமனையிலிருந்து மீண்டும் வர்ணனைக்கு திரும்பினார்.
BAN vs IND: காயத்தால் விலகிய ஷமி.. முதல் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச ஆடும் லெவன்
இதுகுறித்து டுவீட் செய்த ரிக்கி பாண்டிங், எனது நண்பர் ஜஸ்டின் லாங்கர் என்னை நன்றாக கவனித்துக்கொண்டார். நான் மிகவும் பிரகாசமாகவும் உற்சாகத்துடனும் மீண்டும் திரும்பிவிட்டேன். மீண்டும் வர்ணனைக்கு வந்துவிட்டேன். 2ம் நாளின் முக்கியமான ஆட்டத்தை நேற்று மிஸ் செய்துவிட்டேன் என்று ரிக்கி பாண்டிங் பதிவிட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான முதல் டெஸ்ட்டில் முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலிய அணி, ஸ்டீவ் ஸ்மித் (200) மற்றும் மார்னஸ் லபுஷேன் (204) ஆகிய இருவரின் அபாரமான இரட்டை சதங்களால் முதல் இன்னிங்ஸில் 598 ரன்களை குவித்தது. வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 283 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
BAN vs IND: ரிஷப் பண்ட்டுக்கு இதுவே கடைசி சான்ஸ்..! சொதப்பினால் இந்திய அணியில் இடம் காலி
315 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி, 2 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களுக்கு டிக்ளேர் செய்ய, 497 ரன்கள் முன்னிலை பெற்றது. வெஸ்ட் இண்டீஸ் அணி 498 ரன்கள் என்ற மிகக்கடின இலக்கை விரட்டிவருகிறது.