Asianet News TamilAsianet News Tamil

PAK vs ENG: 2வது இன்னிங்ஸில் அறிமுக ஸ்பின்னர் ரெஹான் அகமதுவிடம் சரணடைந்த பாக்.,! இங்கிலாந்துக்கு எளிய இலக்கு

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் அந்த அணிக்கு வெற்றி இலக்காக 167 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை நிர்ணயித்துள்ளது பாகிஸ்தான் அணி.
 

rehan ahmed gets 5 wickets haul in test debut and pakistan set easy target to england in last test match held at karachi
Author
First Published Dec 19, 2022, 5:02 PM IST

இங்கிலாந்து அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடிவருகிறது. ராவல்பிண்டி மற்றும் முல்தானில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தானை வீழ்த்தி இங்கிலாந்து அணி 2-0 என டெஸ்ட் தொடரை வென்றுவிட்ட நிலையில், கடைசி டெஸ்ட் போட்டி கராச்சியில் நடந்துவருகிறது.  இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. 

பாகிஸ்தான் அணி:

அப்துல்லா ஷாஃபிக், ஷான் மசூத், அசார் அலி, பாபர் அசாம் (கேப்டன்), முகமது ரிஸ்வான் (விக்கெட் கீப்பர்), அகா சல்மான், சௌத் ஷகீல், ஃபஹீம் அஷ்ரஃப், நௌமன் அலி, முகமது வாசிம், அப்ரார் அகமது.

BAN vs IND: 2வது டெஸ்ட்டிலிருந்தும் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா விலகல்

இங்கிலாந்து அணி:

ஜாக் க்ராவ்லி, பென் டக்கெட், ஆலி போப், ஜோ ரூட், ஹாரி ப்ரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), பென் ஃபோக்ஸ் (விக்கெட் கீப்பர்), ரெஹான் அகமது, ஆலி ராபின்சன், மார்க் உட், ஜாக் லீச்.

முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணியில், தனது கடைசி டெஸ்ட் போட்டியை ஆடும் அசார் அலி 45 ரன்கள் அடித்தார். சிறப்பாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்த கேப்டன் பாபர் அசாம் 78 ரன்களும், அகா சல்மான் 56 ரன்களும் அடிக்க, முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 304 ரன்கள் அடித்தது.

இதையடுத்து முதல் இன்னிங்ஸை ஆடிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர் ஜாக் க்ராவ்லி முதல் ஓவரிலேயே டக் அவுட்டானார். மற்றொரு தொடக்க வீரரான பென் டக்கெட் 26 ரன்கள் அடித்தார். சிறப்பாக ஆடி அரைசதம் அடித்த ஆலி போப் 51 ரன்கள் அடித்தார். அபாரமாக பேட்டிங் ஆடிய ஹாரி ப்ரூக் சதமடித்தார். ப்ரூக் 111 ரன்களையும், பென் ஃபோக்ஸ் 64 ரன்களையும் குவிக்க, பின்வரிசையில் மார்க் உட் (35) மற்றும் ராபின்சன் (29) ஆகிய இருவரும் சிறு பங்களிப்பு செய்ய, முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 354 ரன்களை குவித்தது. 

50 ரன்கள் பின் தங்கிய நிலையில் 2வது இன்னிங்ஸை ஆடிய பாகிஸ்தான் அணி, இங்கிலாந்து அணியின் அறிமுக ரிஸ்ட் ஸ்பின்னர் ரெஹான் அகமதுவின் சுழலில் சரிந்தது. பாகிஸ்தான் அணி கேப்டன் பாபர் அசாம் (54) மற்றும் சௌத் ஷகீல் (53) ஆகிய இருவர் மட்டுமே அரைசதம் அடித்தனர். மற்றவர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழக்க பாகிஸ்தான் அணி 2வது இன்னிங்ஸில் 216 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அபாரமாக பந்துவீசிய இங்கிலாந்து அணியின் அறிமுக ஸ்பின்னர் ரெஹான் அகமது 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

ICC WTC புள்ளி பட்டியலில் 2ம் இடத்திற்கு முன்னேறிய இந்தியா.. ஃபைனலுக்கு முன்னேற பிரகாசமான வாய்ப்பு

எனவே வெறும் 166 ரன்கள் மட்டுமே முன்னிலை பெற்றதால் இங்கிலாந்து அணி 167 ரன்கள் என்ற எளிய இலக்கை விரட்டுகிறது. இந்த போட்டியிலும் இங்கிலாந்து ஜெயித்துவிடும் என்பதால் பாகிஸ்தான் சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் ஆவது உறுதி.
 

Follow Us:
Download App:
  • android
  • ios