கேகேஆருக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் கேகேஆர் அணிகள் மோதுகின்றன. மும்பை டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் இந்த போட்டி நடக்கிறது.

ஆர்சிபி அணி அதன் முதல் போட்டியில் பஞ்சாப் கிங்ஸிடம் தோற்றது. ஆனால் கேகேஆர் அணி சிஎஸ்கேவை வீழ்த்தி வெற்றி கண்டது. எனவே கேகேஆர் அணி வெற்றி பயணத்தை தொடரும் முனைப்பிலும், ஆர்சிபி அணி இந்த சீசனில் வெற்றி கணக்கை தொடங்கும் முனைப்பிலும் களமிறங்கியுள்ளன.

இந்த போட்டியில் டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ஃபாஃப் டுப்ளெசிஸ் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். ஆர்சிபி அணியின் ஆடும் லெவன் காம்பினேஷனில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. அதே காம்பினேஷனுடன் தான் ஆடுகிறது.

ஆர்சிபி அணி:

ஃபாஃப் டுப்ளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக் (விக்கெட் கீப்பர்), ஷெர்ஃபேன் ரூதர்ஃபோர்டு, ஷபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, டேவிட் வில்லி, ஹர்ஷல் படேல், ஆகாஷ் தீப், முகமது சிராஜ்.

கேகேஆர் அணியில் ஒரேயொரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஃபாஸ்ட் பவுலர் ஷிவம் மாவிக்கு பதிலாக டிம் சௌதி சேர்க்கப்பட்டுள்ளார்.

கேகேஆர் அணி:

வெங்கடேஷ் ஐயர், அஜிங்க்யா ரஹானே, ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), நிதிஷ் ராணா, சாம் பில்லிங்ஸ் (விக்கெட் கீப்பர்), ஆண்ட்ரே ரசல், சுனில் நரைன், ஷெல்டான் ஜாக்சன்., உமேஷ் யாதவ், டிம் சௌதி, வருண் சக்கரவர்த்தி.