IPL 2023: இவரால் தோனி கிட்ட கூட வர முடியாது:பிளான், எக்ஸ்கியூஷன் இல்லாமல் கோட்டைவிட்ட தினேஷ் கார்த்திக்!

கடைசி நேரத்தில் கிடைத்த ரன் அவுட் வாய்ப்பை ஆர்சிபி விக்கெட் கீப்பர் தினேஷ் கீப்பர் கோட்டைவிட லக்னோ அணி 1 விக்கெட் வித்தியாத்தில் த்ரில வெற்றி பெற்றது.

RCB Wicket Keeper Dinesh Karthik Miss the run out against LSG in 15th IPL Match

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகளுக்கு இடையிலான 15ஆவது போட்டி நேற்று பெங்களூரு சின்னச்சாமி மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி, முதலில் ஆடிய பெங்களூரு அணியில் விராட் கோலி, மேக்ஸ்வெல், பாப் டூபிளெசிஸ் ஆகியோர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவே ஆர்சிபி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். மேயர்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தீபக் கூடா 9 ரன்களில் வெளியேற, குர்ணல் பாண்டியாவும் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.

IPL 2023: கடைசி பந்தில் விக்கெட் எடுக்க நினைத்தோம், அது நடக்கவில்லை - ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்!

கேப்டன் கேஎல் ராகுல் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னிஸ் இருவரும் களத்தில் நின்று ஆடினர். அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 6 பவுண்டரிகள் உள்பட 60 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு கேஎல் ராகுலும் 18 ரன்களுக்கு வெளியேறினார். ஒரு கட்டத்தில் லக்னோ அணி 11.1 ஓவர்களில் 5 விக்கெட் இழந்து 105 ரன்கள் எடுத்து தடுமாறியது. அப்போது தான் நிக்கோலஸ் பூரன் வந்து சரவெடியாக வெடித்தார். அவர், 19 பந்த்களில் 7 சிக்ஸர்கள் 4 பவுண்டரிகள் உள்பட 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அப்போது ஸ்கோர் 189 ஆக இருந்தது. பிறகு ஆயுஷ் பதானி தன் பங்கிற்கு 30 ரன்கள் சேர்த்து ஹிட் விக்கெட் முறையில் ஆட்டமிழந்தார்.

IPL 2023: எப்படான்னு காத்திருக்கும் மும்பை; இன்னிக்காவது ஜெயிப்போமான்னு வெயிட் பண்ணும் டெல்லி!

இறுதியாக கடைசி ஒரு ஓவரில் 5 ரன்கள் தேவைப்பட்டது. கடைசி ஓவரை ஹர்ஷல் படேல் வீசினார். முதல் பந்தில் உனத்கட் ஒரு ரன் எடுத்தார். 2அவது பந்தில் மார்க் வுட் அவுட்டானார். 3ஆவது பந்தில் பிஷ்னாய் 2 ரன்கள் எடுத்தார். 4ஆவது பந்தில் ஒரு ரன் எடுத்தார். கடைசியாக 2 பந்துகளில் 2 ரன்கள் தேவைப்பட்டது. 5ஆவது பந்தில் உனத்கட் ஆட்டமிழந்தார். கடைசி பந்தில் லக்னோ வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்டது. போட்டியை சமனில் முடிக்க ஆர்சிபிக்கு ஒரு விக்கெட் தேவைப்பட்டது. இந்த நிலையில், தான் ஹர்ஷல் படேல் ஒரு டுவிஸ்ட் வச்சார். ரவிச்சந்திரன் அஸ்வின் மாதிரி ரவி பிஷ்னாயை மான்கட் முறையில் ஆட்டமிழக்க செய்திடலாம் என்று முயற்சித்து தோல்வி அடைந்தார். எனினும், ரன் அவுட் செய்தார். ஆனாலும், அதற்கு பலனில்லாமல் போய்விட்டது.

IPL 2023: கள்ளச்சந்தையில் ஜோராக நடக்கும் டிக்கெட் விற்பனை; ஒரு டிக்கெட் ரூ.5000க்கு விற்பனை!

 

 

கடைசியாக கடைசி பந்தில் எக்ஸ்ட்ராஸ் மூலமாக ஒரு ரன் எடுக்க லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் வெற்றி பெற்றுவிட்டது. கடைசி பந்து விக்கெட் கீப்பர் கைக்கு செல்லவே தினேஷ் கார்த்திக் தட்டு தடுமாறி, விழுந்து பந்தை எடுத்து எறிவதற்குள்ளாக ஆவேஷ் கான், பிஷ்னாய் இருவரும் ஓடி ஒரு ரன் எடுத்தனர். ஆனால், தோனியின் விவேகம், வேகம் எதுவும் தினேஷ் கார்த்திக்கிடம் இல்லை. கடந்த 2016 டி20 உலகக் கோப்பையில் வங்கதேசத்துக்கு எதிராக கடைசி பந்தில் தோனி எப்படி செயல்பட்டாரோ அதே போன்று செயல்பட முயற்சித்து தோல்வியை தழுவினார். இதன் காரணமாக தினேஷ் கார்த்திக் டுவிட்டரில் விமர்சிக்கப்பட்டு வருகின்றார்.

 

 

 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios