IPL 2023: எப்படான்னு காத்திருக்கும் மும்பை; இன்னிக்காவது ஜெயிப்போமான்னு வெயிட் பண்ணும் டெல்லி!
மும்பை மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கு இடையிலான 16ஆவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் தொடங்குகிறது.
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
நடப்பு ஆண்டுக்கான 16ஆவது ஐபிஎல் சீசன் பிரம்மாண்டமாக தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், இடம் பெற்றுள்ள 10 அணிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் ஆகிய அணிகளைத் தவிர மற்ற அணிகள் ஐபிஎல் 2023 கிரிக்கெட்டில் வெற்றியை பதிவு செய்துவிட்டன.
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இன்று டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடக்கும் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. ஏற்கனவே டெல்லியில் நடந்த போட்டியில் டெல்லி அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
டெல்லி அணியின் வேகப்பந்து வீச்சாளர் கலீல் அஹமது காயம் காரணமாக கடந்த போட்டியில் அவர் விளையாடவில்லை. இந்தப் போட்டியிலும் அவர் இடம் பெற மாட்டார் என்று கூறப்படுகிறது. கடந்த போட்டியில் அக்ஷர் படேல் பந்து வீசவில்லை. இந்தப் போட்டியில் அவர் கண்டிப்பாக பந்து வீசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
டெல்லி அணியின் தொடக்க வீரர் பிருத்வி ஷா தொடர்ந்து சொதப்பி வரும் நிலையில், இந்தப் போட்டியில் கண்டிப்பாக ரன்கள் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளார்கள் சொதப்பி வரும் நிலையில் இந்தப் போட்டியில் இஷாந்த் சர்மா இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு போட்டியிலும் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் சிறப்பான பங்களிப்பை வெளிப்படுத்தி வருகிறார்.
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
இதே போன்று மும்பை இந்தியன்ஸ் அணியில் சூர்யகுமார் யாதவ் தொடர்ந்து சொதப்பி வருகிறார். கேப்டன் ரோகித் சர்மா கூட இன்னும் ஐபிஎல் தொடரில் 30 ரன்கள் கூட அவர் எட்டவில்லை. இதுவரையில் விளையாடிய 2 போட்டிகளில் 1 மற்றும் 21 ரன்கள் என்று தான் அவர் எடுத்துள்ளார்.
டெல்லி கேபிடல்ஸ் - மும்பை இந்தியன்ஸ்
கடைசியாக நடந்த ஹோம் மைதான போட்டிகளில் எதிரணியே வெற்றி பெற்றுள்ளது. உதாரணமாக, மும்பையில் நடந்த போட்டியில் சென்னை வென்றது, அகமதாபாத் மைதானத்தில் நடந்த போட்டியில் கொல்கத்தா வெற்றி பெற்றது. பெங்களூருவில் நடந்த போட்டியில் லக்னோ வெற்றி பெற்றது. இந்த நிலையில், இன்று டெல்லியில் நடக்கும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் தான் வெற்றி பெறுவதற்கு வாய்ப்பிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.