MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IPL 2023: கடைசி பந்தில் விக்கெட் எடுக்க நினைத்தோம், அது நடக்கவில்லை - ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்!

IPL 2023: கடைசி பந்தில் விக்கெட் எடுக்க நினைத்தோம், அது நடக்கவில்லை - ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளசிஸ்!

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கடைசி பந்தில் தோல்வி அடைந்த நிலையில், ஆர்சிபி அணியின் கேப்டன் டூபிளெசிஸ் நாங்க கடைசி பந்தில் விக்கெட் எடுக்க நினைத்தோம் ஆனால், அது நடக்கவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Apr 11 2023, 04:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்   ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஐபிஎல் கிரிக்கெட் பரப்பரப்பாக சென்று கொண்டிருக்கிறது. ஒவ்வொரு போட்டியும், விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும், த்ரில்லாகவும் இருக்கிறது. குஜராத் போட்டியில் கொல்கத்தா அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. அதே போன்று ஆர்பிசி போட்டியில் லக்னோ அணி கடைசி பந்தில் வெற்றியை ருசித்தது. நேற்று பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதியது. முதலில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

அதன்படி முதலில் ஆடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 212 ரன்கள் குவித்தது. இதில், விராட் கோலி 21 ரன்னும், மேக்ஸ்வெல் 59 ரன்னும் எடுத்து ஆட்டமிழந்தனர். பாப் டூபிளெசிஸ் 79 ரன்னுடன் களத்தில் இருந்தார். பின்னர் கடின இலக்கை துரத்திய லக்னோ அணிக்கு மேயர்ஸ் ஆரம்பத்திலேயே அதிர்ச்சி கொடுத்தார். அவர் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். தீபக் கூடா 9 ரன்னில் வெளியேறினார். குர்னல் பாண்டியா ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். 23 ரன்னுக்குள் 3 விக்கெட்டை இழந்து லக்னோ அணி தடுமாறியது. அதன் பிறகு தான் மார்கஸ் ஸ்டாய்னிஸ் களமிறங்கினார். அவர், ஆர்சிபி பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார்.

38
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஸ்டாய்னிஸ் 30 பந்துகளில் 5 சிக்ஸர்கள் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் ராகுலும் 18 ரன்னுக்கு ஆட்டமிழந்தார். அவர் தொடர்ந்து 8, 20, 35 ரன்கள் சேர்த்திருந்த நிலையில், நேற்றைய போட்டியில் 18 ரன்களில் வெளியேறினார். இதுவரையில் லக்னோ ஆடிய 4 போட்டிகளில் மொத்தமாக 81 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். 

48
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

இவர்களைத் தொடர்ந்து அதிரடி நாயகன் நிக்கோலஸ் பூரன் களமிறங்கினார். களமிறங்கிறது முதல் பவுண்டரியும், சிக்ஸருமாக விளாசினார். 15 பந்துகளில் தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். அதுமட்டுமின்றி அதிவேகமாக அரைசதம் அடித்தவர்களின் பட்டியலில் நிக்கோலஸ் பூரனும் இடம் பிடித்தார். இதற்கு முன்னதாக கேஎல் ராகுல் 14 பந்துகளில் அரைசதம், பேட் கம்மின்ஸ் 14 பந்துகளில் அரைசதம், யூசுப் பதான் 15, சுனில் நரைன் 15 மற்றும் நிக்கோலஸ் பூரன் ஆகியோர் குறைந்த பந்துகளில் அரைசதம் அடித்துள்ளனர். 

58
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஒரு கட்டத்தில் லக்னோவின் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்த நிலையில் பூரன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த மார்க் வுட்டும் சொல்லும்படி ஒன்றுமில்லை. கடைசி 2 ஓவர்களில் 15 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது களத்தில் இருந்த இம்பேக்ட் பிளேயர் ஆயுஷ் பதானி சிக்ஸர் அடிக்க முயற்சித்து ஹிட் விக்கெட் முறையில் வெளியேறினார்.

68
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

ஆனால், அவர் அடித்தது சிக்சர் தான். இதையடுத்து கடைசி ஓவரில் லக்னோ வெற்றிக்கு 5 ரன்கள் தேவைப்பட்டது. ஒரு கட்டத்தில் 4 ரன்கள் எடுக்கப்பட்ட நிலையில், 2 பந்துகளில் 1 ரன் தேவைப்பட்டது. அப்போது 5ஆவது பந்தில் உனத்கட் ஆட்டமிழந்தார். கடைசியில் ஆவேஷ் கான் களமிறங்கினார். கடைசி பந்தில் பைஸ் முறையில் ஒரு ரன் கிடைக்க, லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி 1 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

78
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

தோல்விக்குப் பிறகு பேசிய ஆர்சிபி கேப்டன் பாப் டூபிளெசிஸ் கூறியிருப்பதாவது: மிடில் ஓவர்களில் லக்னோ வீரர்கள் சிறப்பாக பந்து வீசினர். கடைசி பந்தில் எப்படியாவது விக்கெட் எடுக்க வேண்டும் என்று நினைத்தோம். ஆனால், அது நடக்காமல் போய்விட்டது. கடைசி 5 ஓவர்களில் மைதானம் பேட்டிங்கிற்கு சாதமாக மாறிவிட்டது. 

88
லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

மார்கஸ் ஸ்டாய்னிஸ் மற்றும் நிக்கோலஸ் பூரண் சிறப்பாக பேட்டிங் ஆடினர். முக்கிய பந்து வீச்சாளர்களில் ஒருவரான ஹர்சல் படேல் முதல் இரு ஓவர்களில் அதிக ரன்கள் எடுக்கப்பட்டது. டெத் ஓவர்களை வீசுவது என்பது கடினம் தான். தவறுகளை கண்டிப்பாக சரி செய்து கொள்வோம் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணி பந்து வீச அதிக நேரம் எடுத்துக் கொண்டதை சுட்டிக்காட்டி ஐபிஎல் நிர்வாகம் பாப் டூபிளெசிஸ்க்கு ரூ.12 லட்சம் அபராதம் விதித்துள்ளது. 

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
கௌதம் கம்பீர்
கே. எல். ராகுல்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
விராட் கோலி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Vaibhav Suryavanshi: "சுடு தண்ணி மட்டும் குடிப்பா.." வைபவ் சூர்யவன்ஷிக்கு ரசிகை அட்வைஸ்.. பாலகன் ரியாக்ஷன் வீடியோ பாருங்க!
Recommended image2
Abhishek Sharma: ஐசிசி டி20 ரேங்கிங்கில் மீண்டும் நம்பர் 1 ஆன அபிஷேக் ஷர்மா!
Recommended image3
IND vs NZ 3rd T20: அதிவேக சதம்.. அதிவேக பவர்பிளே ரன்.. ஒரே போட்டியில் பல ரிக்கார்டுகளை உடைத்த இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved