சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டியில் விராட் கோலி 9 ரன்கள் எடுத்ததன் மூலமாக டி20 வரலாற்றில் முதல் இந்திய வீரராக விராட் கோலி 12,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் 2024 தொடரின் முதல் போட்டி தற்போது சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், முதலில் டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் பாப் டூப்ளெசிஸ் பேட்டிங் செய்வதாக அறிவித்தார். அதன்படி விராட் கோலி மற்றும் பாப் டூப்ளெசிஸ் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினார். விராட் கோலி ஒரு ரன் எடுத்து இந்த சீசனை தொடங்கி வைத்தார்.
அதன் பிறகு முழு கண்ட்ரோலையும் தன் வசப்படுத்திய பாப் டூப்ளெசிஸ் சிஎஸ்கே பவுலர்களை சரமாரியாக வெளுத்து வாங்கினார். ஆர்சிபி 3 ஓவருக்கு விக்கெட் இழப்பின்றி 33 ரன்கள் எடுத்திருந்த நிலையில், 4.3ஆவது ஓவரில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் பந்து வீச்சில் பாப் டூப்ளெசிஸ் 23 பந்துகளில் 8 பவுண்டரி உள்பட 35 ரன்கள் எடுத்த நிலையில் ரச்சின் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஜத் படிதார் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
இவரைத் தொடர்ந்து தீபக் சாஹர் பந்தில் கிளென் மேக்ஸ்வெல் கோல்டன் டக் முறையில் ஆட்டமிழந்தார். ஆர்சிபி 6 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 42 ரன்கள் எடுத்து தடுமாறியது. இந்த நிலையில் தான் இந்த போட்டியில் விராட் கோலில் 10 பந்துகளில் 9 ரன்கள் எடுத்திருந்த போது டி20 கிரிக்கெட் வரலாற்றில் முதல் இந்திய வீரராக 12,000 ரன்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளார். இதற்காக விராட் கோலி 360 இன்னிங்ஸ் எடுத்துக் கொண்டுள்ளார்
டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடந்த வீரர்கள்:
14562 – கிறிஸ் கெயில்
13360 – சோயிப் மாலிக்
12900 – கெரான் போலார்டு
12319 – அலெக்ஸ் ஹேல்ஸ்
12065 – டேவிட் வார்னர்
12000* - விராட் கோலி
டி20 கிரிக்கெட்டில் 12,000 ரன்களை கடக்க எடுத்துக் கொண்ட இன்னிங்ஸ்:
345 – கிறிஸ் கெயில்
360 – விராட் கோலி
368 – டேவிட் வார்னர்
432 – அலெக்ஸ் ஹேல்ஸ்
451 – சோயிப் மாலிக்
550 – கெரான் போலார்டு
இதுமட்டுமின்றி சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிராக 1000 ரன்களை கடந்து சாதனை படைத்துள்ளார்.
1,000-plus runs against an opponent in the IPL
1105 – டேவிட் வார்னர் vs பஞ்சாப் கிங்ஸ்
1075 – டேவிட் வார்னர் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
1057 – ஷிகர் தவான் vs சென்னை சூப்பர் கிங்ஸ்
1040 – ரோகித் சர்மா vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்
1030 – விராட் கோலி vs டெல்லி கேபிடல்ஸ்
1006* - விராட் கோலி vs சென்னை சூப்பர் கிங்ஸ்
இந்தப் போட்டியில் முதல் சிக்ஸர் விளாசிய விராட் கோலி 20 பந்துகளில் 21 ரன்கள் எடுத்த நிலையில் முஷ்தாபிஜுர் ரஹ்மான் பந்தில் பவுண்டரி லைனில் வைத்து அஜின்க்யா ரஹானே பிடித்து அதனை ரச்சின் ரவீந்திராவிடம் தூக்கி வீசவே அவர் கேட்ச் பிடித்தார். அடுத்ததாக கேமரூன் க்ரீன் விக்கெட்டையும் கிளீன் போல்டு முறையில் கைப்பற்றியுள்ளார். தற்போது வரையில் முஷ்தாபிஜூர் ரஹ்மான் 4 விக்கெட்டுகள் கைப்பற்றியிருக்கிறார்
