ராஜ்கோட்டிற்கு ராஜாவான ஜட்டு - 5 விக்கெட் கைப்பற்றி சாதனை – பிட்சுக்கும், பந்துக்கும் முத்தமிட்ட தருணம்!

இங்கிலாந்திற்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி வீரர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட்டுகள் கைப்பற்றி சாதனை படைத்த நிலையில் பிட்சுக்கும், பந்திற்கும் முத்தமிட்டுள்ளார்.

Ravindra Jadeja Took 5 Wickets against England in 3rd Test Match at Rajkot rsk

ராஜ்கோட்டில் இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது போட்டி நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 445 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து 319 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 2ஆவது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணிக்கு யஷஸ்வி ஜெய்ஸ்வால் நல்ல தொடக்கம் கொடுத்தார். அவர் 104 ரன்கள் எடுத்திருந்த நிலையில் முதுகுவலியால் அவதிப்பட்டு ரிட்டயர்டு ஹர்ட் முறையில் வெளியேறினார்.

அதன் பிறகு சுப்மன் கில் மற்றும் குல்தீப் யாதவ் நிதானமாக விளையாடி ரன்கள் குவித்தனர். கில் 91 ரன்களில் ரன் அவுட் செய்யப்பட்டார். இதையடுத்து குல்தீப் யாதவ் 27 ரன்களில் ஆட்டமிழந்தார். பின்னர் வந்த யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் சர்ஃபராஸ் கான் இருவரும் இணைந்து அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தனர். சர்ஃபராஸ் கான் 68 ரன்களும், ஜெய்ஸ்வால் 214 ரன்களும் எடுத்திருந்த போது கேப்டன் ரோகித் சர்மா டிக்ளேர் செய்வதாக அறிவித்தார். 2ஆவது இன்னிங்ஸில் இந்திய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 430 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன் மூலமாக இங்கிலாந்து அணிக்கு 557 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. பின்னர், கடின இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு தொடக்க வீரர்கள் பென் டக்கெட் 4 ரன்களில் ரன் அவுட்டானார். ஜாக் கிராவ்லி 11 ரன்களில் பும்ரா பந்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு வந்த ஆலி போப் (3), ஜோ ரூட் (7), ஜானி பேர்ஸ்டோவ் (4) ஆகியோரது விக்கெட்டுகளை ரவீந்திர ஜடேஜா கைப்பற்றினார்.

இதில் என்ன ஆச்சரியம் என்னவென்றால் மூவரும் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தனர். அதன் பின் வந்த பென் ஸ்டோக்ஸ் 15 ரன்களில் குல்தீப் யாதவ் பந்தில் ஆட்டமிழந்தார். பென் ஃபோக்ஸ் 16 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழந்தார். ரெஹான் அகமது டக் அவுட்டில் ஆட்டமிழந்தார். டாம் ஹார்ட்லி 16 ரன்களில் நடையை கட்டினார்.

மார்க் வுட் 33 ரன்களில் ஜடேஜா பந்தில் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 122 ரன்கள் மட்டுமே எடுத்து 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்தப் போட்டியில் 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதன் மூலமாக இந்திய அணி அதிகபட்சமாக 434 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி வாகை சூடியது.

இங்கிலாந்து அதிகபட்சமாக ஆஸ்திரேலியாவிற்கு எதிராக 562 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இதையடுத்து இந்தியாவிற்கு எதிராக 434 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. இந்த நிலையில் தான் ஒரு டெஸ்ட் போட்டியில் சதமும், 5 விக்கெட்டும் கைப்பற்றியவர்களின் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா இடம் பெற்றுள்ளார்.

கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரையில் சதமும், 5 விக்கெட்டும் கைப்பற்றியவர்களின் பட்டியல்:

ரவிச்சந்திரன் அஸ்வின் 103 மற்றும் 5/156 – வெஸ்ட் இண்டீஸ் – 2011

ரவிச்சந்திரன் அஸ்வின் 113 மற்றும் 7/83 – வெஸ்ட் இண்டீஸ் – 2016

ரவிச்சந்திரன் அஸ்வின் 106 மற்றும் 5/43 – இங்கிலாந்து – 2021

ரவீந்திர ஜடேஜா 175* மற்றும் 5/41 – இலங்கை – 2022

ரவீந்திர ஜடேஜா 112 மற்றும் 5/41 – இங்கிலாந்து – 2024

இந்த நிலையில் இந்த போட்டியில் 5 விக்கெட்டுகள் கைப்பற்றிய நிலையில் பிட்சுக்கும், பந்துக்கும் முத்தமிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்தப் போட்டியில் ஆட்டநாயகன் விருதும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios