Asianet News TamilAsianet News Tamil

5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய ஜெர்சி: ரவீந்திர ஜடேஜா பெருமிதம்!

கடந்த 5 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் இந்திய அணியின் ஜெர்சி அணிவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா தெரிவித்துள்ளார்
 

Ravindra Jadeja Share his Excitement of comeback from his recovery
Author
First Published Feb 6, 2023, 11:15 AM IST

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட ஆஸ்திரேலியா 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வரும் 9ஆம் தேதி நாக்பூரில் உள்ள ஜம்தாபூவில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடக்கிறது. 2ஆவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் வரும் 17 ஆம் தேதி நடக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 2 டெஸ்ட் போட்டிகளுக்கு இந்திய அணி அறிவிக்கப்பட்டது.

Womens T20 World Cup 2023: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் முதல் போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் மோதல்!

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), கே.எல். ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சட்டீஸ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கே.எஸ்.பாரத் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், அக்‌ஷர் படேல், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா, முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ், ஜெய்தேவ் உனட்கட் மற்றும் சூர்யகுமார் யாதவ்.

பந்து வீச்சாளர்கள் வர வேண்டும்: தமிழ்நாடு ரஞ்சி டிராபி உங்கள் கையில் தான் இருக்கிறது - ரவிச்சந்திரன் அஸ்வின்!

இரு அணிகளும் தங்களது பயிற்சியை தொடங்கியுள்ளனர். இந்த நிலையில், காயம் காரணமாக இந்திய அணியில் கிட்டத்தட்ட 5 மாதங்களாக இடம் பெறாமல் இருந்த ரவீந்திர ஜடேஜா மீண்டும் இந்திய அணியின் ஜெர்சி அணிவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: 5 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியின் ஜெர்சியை அணிகிறேன். 

இந்த பயணத்தில் நான் ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளேன். தொடர்ந்து கிரிக்கெட் விளையாடிக் கொண்டு ஒரு நாள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களில் கிரிக்கெட் விளையாடாமல் போனால் உங்களது மனநிலை எப்படி இருக்கும் என்பதை நீங்களே சிந்தித்து பாருங்கள். அப்படிப்பட்ட மனநிலையில் தான் நான் இருந்தேன். எனக்கு காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஆனால், இந்திய அணியின் ஜெர்சியை அணிய வேண்டும் என்ற எண்ணம் தான் என்னை ஊக்குவித்தது என்று தெரிவித்துள்ளார்.

Border Gavaskar Trophy: ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அதிக ரன்கள் எடுத்த டாப் 5 பேட்ஸ்மேன்கள்!

ஆஸ்திரேலியா அணி:

பாட் கம்மின்ஸ் (கேப்டன்), ஆஷ்டன் அகர், ஸ்காட் போலண்ட், அலெக்ஸ் கேரி, கேமரூன் கிரீன், பீட்டர் ஹேண்ட்ஸ்கோம்ப், ஜோஷ் ஹேசில்வுட், டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, நாதன் லியோன், லான்ஸ் மோரிஸ், டாட் மர்பி, மேத்யூ ரென்ஷா, ஸ்டீவ் ஸ்மித் (துணை கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், மிட்செல் ஸ்வெப்சன், டேவிட் வார்னர்

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios