சிட்னியில் மழையையும் பொருட்படுத்தாது ஜடேஜா தீவிர பயிற்சி செய்யும் வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.

3 ஒருநாள், 3 டி20 மற்றும் 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுவதற்காக இந்திய அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ளது. வரும் 27ம் தேதி முதல் ஒருநாள் போட்டி தொடங்குகிறது.

சிட்னியில் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். கேப்டன் விராட் கோலி உள்ளிட்ட இந்திய வீரர்கள் பேட்டிங் மற்றும் ஃபீல்டிங் பயிற்சி செய்யும் வீடியோக்கள் டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்துவருகின்றன.

இந்திய வீரர்கள் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை ராகுல் அண்மையில் பகிர்ந்திருந்தார். இந்நிலையில், இப்போது மழையையும் பொருட்படுத்தாது ஜடேஜா தீவிர பயிற்சி செய்யும் வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.