இந்தியா ஆஸ்திரேலியா இடையேயான ஒருநாள் தொடர் முடிந்து, டி20 தொடர் நடந்துவருகிறது. நாளை கடைசி டி20 போட்டி நடக்கவுள்ள நிலையில், 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி வரும் 17ம் தேதி தொடங்குகிறது. அடிலெய்டில் நடக்கும் இந்த போட்டியில் ஜடேஜா ஆடுவது சந்தேகம் தான்.

முதல் டி20 போட்டியில் பேட்டிங் ஆடியபோது ஜடேஜாவின் தலையில்(ஹெல்மெட்டில்) பந்து தாக்கியதால், கன்கஷனில் இருக்கும் ஜடேஜா, அந்த போட்டியின் 2வது இன்னிங்ஸில் ஆடவில்லை. 2வது டி20 போட்டியிலும் ஆடவில்லை. கன்கஷனில் இருக்கும் ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியிலும் ஆடமுடியாது.

ஐசிசியின் கன்கஷன் விதிப்படி, தலையில் அடிபட்ட ஒரு வீரர் குறைந்தது 10 நாட்கள் ஓய்வெடுக்க வேண்டும். அந்தவகையில், முதல் டெஸ்ட்டுக்கு முன் நடக்கும் பயிற்சி போட்டியில் ஜடேஜா ஆடமுடியாது.

பயிற்சி போட்டியில் கூட ஆடாமல் நேரடியாக டெஸ்ட் போட்டியில் ஜடேஜா ஆடவைக்கப்பட வாய்ப்பில்லை. எனவே சிவப்பு பந்தில் பயிற்சி செய்யாமல் ஜடேஜாவை நேரடியாக டெஸ்ட் போட்டியில் ஆடவைக்க வாய்ப்பில்லை என்பதால் ஜடேஜா முதல் டெஸ்ட் போட்டியில் ஆடமாட்டார்.