Asia Cup: இர்ஃபான் பதான் சாதனையை தகர்த்து முதலிடம் பிடித்தார் ரவீந்திர ஜடேஜா..!

ஆசிய கோப்பையில் அதிக விக்கெட் வீழ்த்திய இந்திய பவுலர் என்ற சாதனையை படைத்துள்ளார் ரவீந்திர ஜடேஜா. 
 

ravindra jadeja breaks irfan pathan record and he is now the highest wicket taker for india in asia cup

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது. பி பிரிவில் இடம்பெற்ற ஆஃப்கானிஸ்தான் அணி, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய 2 அணிகளையும் வீழ்த்தி முதல் அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது.

ஏ பிரிவில் இடம்பெற்ற இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய 2 அணிகளையும் வீழ்த்தி சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறியது. 

இதையும் படிங்க - சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக டுப்ளெசிஸ் நியமனம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு! ஹெட்கோச் ஸ்டீஃபன் ஃப்ளெமிங்

ஏ பிரிவில் ஹாங்காங் அணியை வீழ்த்தி பாகிஸ்தான் எளிதாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறிவிடும். பி பிரிவில் 2வது அணியாக சூப்பர் 4 சுற்றுக்கு முன்னேறுவது யார் என்பதை தீர்மானிக்கும், இலங்கை - வங்கதேசம் இடையேயான போட்டி இன்று நடக்கிறது.

ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் ஆல்ரவுண்டர்கள் ஜடேஜா மற்றும் ஹர்திக் பாண்டியா ஆகிய இருவரும் அபாரமாக ஆடிவருகின்றனர். ஆல்ரவுண்டர்கள் சிறப்பாக செயல்படுவது, எந்த அணியாக இருந்தாலும், அந்த அணிக்கு நல்லதே. அந்தவகையில், ஹர்திக் பாண்டியா மற்றும் ஜடேஜா ஆகிய 2 ஆல்ரவுண்டர்களின் சிறந்த ஃபார்ம் இந்திய அணிக்கு அனுகூலமான விஷயம்.

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு 29 பந்தில் 35 ரன்கள் அடித்து இந்திய அணியின் வெற்றியில் முக்கிய பங்குவகித்த ரவீந்திர ஜடேஜா, ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் பவுலிங்கில் ஒரு விக்கெட் வீழ்த்தினார். ஹாங்காங்கிற்கு எதிரான போட்டியில் பேட்டிங் ஆட ஜடேஜாவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. பவுலிங்கில் ஒரு விக்கெட் வீழ்த்தினார்.

இதையும் படிங்க - ஹர்திக் பாண்டியா செம பிளேயர்; அதுல எந்த டவுட்டும் இல்ல! ஆனால் அந்த ஒரு விஷயம் தான் கவலையா இருக்கு - கபில் தேவ்

ஹாங்காங் அணிக்காக நன்றாக பேட்டிங் ஆடிக்கொண்டிருந்த பாபர் ஹயாத்தின் (41) விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். ஆசிய கோப்பை தொடரில் இது ஜடேஜாவின் 23வது விக்கெட். இதன்மூலம் ஆசிய கோப்பை தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய பவுலர் என்ற சாதனையை ஜடேஜா படைத்துள்ளார். 

இதற்கு முன் ஆசிய கோப்பையில் 12 போட்டிகளில் ஆடி இர்ஃபான் பதான் வீழ்த்திய 22 விக்கெட்டுகள் தான் ஆசிய கோப்பையில் இந்திய பவுலர் வீழ்த்திய அதிக விக்கெட்டுகளாக இருந்தது. அந்த சாதனையை முறியடித்து ஜடேஜா புதிய சாதனை படைத்துள்ளார். 
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios