ஹர்திக் பாண்டியா செம பிளேயர்; அதுல எந்த டவுட்டும் இல்ல! ஆனால் அந்த ஒரு விஷயம் தான் கவலையா இருக்கு - கபில் தேவ்
ஹர்திக் பாண்டியா மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்றும், ஆனால் அவரது ஃபிட்னெஸ் தான் அச்சுறுத்தலாக இருப்பதாக முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியா. அதிரடியான பேட்டிங், அபாரமான பவுலிங், அருமையான ஃபீல்டிங் என ஒரு தேர்ந்த ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா, கடந்த 2 ஆண்டுகளாக காயம் காரணமாக இந்திய அணியில் பெரிதாக ஆடவில்லை.
ஆனால் காயத்திலிருந்து மீண்டு முழு ஃபிட்னெஸுடன் ஐபிஎல்லில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக பேட்டிங், பவுலிங் மட்டுமல்லாது கேப்டன்சியிலும் அசத்தினார் ஹர்திக் பாண்டியா. அதன்விளைவாக மீண்டும் இந்திய அணியில் தனக்கான நிரந்தர இடத்தை பிடித்து மேட்ச் வின்னராக ஜொலித்துவருகிறார்.
இதையும் படிங்க - Asia Cup: செம பேட்டிங் சூர்யா.. சூர்யகுமார் யாதவுக்கு தலைவணங்கிய விராட் கோலி..! வைரல் வீடியோ
ஆசிய கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிரான முக்கியமான போட்டியில் பவுலிங்கில் 3 விக்கெட் வீழ்த்தி அசத்திய ஹர்திக் பாண்டியா, பேட்டிங்கிலும் 17 பந்தில் 33 ரன்கள் அடித்து இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்து ஆட்டநாயகன் விருதையும் வென்றார்.
இந்த ஆண்டில் 13 டி20 போட்டிகளில் ஆடி 34.88 என்ற சராசரியுடன் 314 ரன்கள் அடித்துள்ள ஹர்திக் பாண்டியா, 11 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் கிரிக்கெட்டில் 2 இன்னிங்ஸில் 100 ரன்களை விளாசி அசத்தினார். அதில் ஒரு அரைசதம் (71) அடக்கம்.
ஹர்திக் பாண்டியா மீண்டும் இந்திய அணிக்காக ஒரு சிறந்த ஆல்ரவுண்டராகவும் மேட்ச் வின்னராகவும் ஜொலித்துவரும் நிலையில், ஹர்திக் பாண்டியா குறித்து முன்னாள் கேப்டன் கபில் தேவ் கருத்து கூறியுள்ளார்.
இதையும் படிங்க - கோலி, ஒரு தலைமுறைக்கே முன்னோடி நீங்கள்..! விராட் கோலிக்கு நினைவுப்பரிசு வழங்கி நெகழவைத்த ஹாங்காங் அணி
ஹர்திக் பாண்டியா குறித்து பேசிய கபில் தேவ், பாண்டியா மாதிரி ஒரு ஆல்ரவுண்டர் இருப்பது அணிக்கு எப்போதுமே பெரும் பலம் ஆகும். ஹர்திக் பாண்டியா, ஜடேஜா என்ற 2 சிறந்த ஆல்ரவுண்டர்கள் உள்ளனர். இருவருமே தங்களது முழு பவுலிங் கோட்டாவையும் வீசி, பேட்டிங்கிலும் பங்களிப்பு செய்யக்கூடியவர்கள். இருவரும் சிறந்த தடகள வீரர்களும் கூட. ஆல்ரவுண்டர் எப்போதுமே அணிக்கு வலுசேர்ப்பார். ஹர்திக் பாண்டியாவை நினைத்து பெருமைப்படுகிறேன். ஆனால் அவர் காயமடைவதுதான் கவலையாக உள்ளது. அவர் காயமடைந்தால் ஒட்டுமொத்த அணியும் காயமடைந்த மாதிரி என்று கபில் தேவ் கூறியுள்ளார்.