ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படுகிறது என்று ஐ ஹேவ் தி ஸ்டிரீட்ஸ் குட்டி கிரிக்கெட் ஸ்டோரி புத்தக வெளியிட்டு வீழாவில் ரவிச்சந்திரன் அஸ்வின் பேசியுள்ளார்.

ஐபில் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிய ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போது நடைபெற்று வரும் டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறவில்லை. தற்போது ஓய்வில் இருக்கும் அஸ்வின் அடுத்தடுத்த தொடர்களில் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் தான், அஸ்வின் தனது கிரிக்கெட் பயணத்தை I Have the Street A Kutti Cricket Story என்ற பெயரில் புத்தகம் எழுதி வெளியிட்டுள்ளார். அஸ்வின் மற்றும் பத்திரிக்கையாளர் சித்தார்த் எழுதிய இந்த குட்டி ஸ்டோரி புத்தகத்தை சென்னையில் நட்சத்திர விடுதியில் வெளியிட்டுள்ளார். இந்த புத்தகமானது அஸ்வினின் சுயசரிதை போன்று அல்லாமல் அவரது கிரிக்கெட் அனுபவத்தை பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

View post on Instagram

அஸ்வினின் இந்த புத்தகத்தை இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட் முன்னுரை எழுதியிருக்கிறார். புத்தக வெளியிட்டு விழாவில் பேசிய அஸ்வின் கூறியிருப்பதாவது: இந்திய அணியில் இடம் பெற்று விளையாடுவது என்பது அவ்வளவு எளிதானதல்ல. இந்திய அணிக்கு தேர்வான போது இந்தி தெரியாமல் கஷ்டப்பட்டதாகவும், இந்தி தெரியாது போடா என்று சொல்லலாம் என்று நினைத்ததாகவும் கூறினார்.

மேலும், கிரிக்கெட் விளையாட்டில் தமிழ்நாடு தனியாகவே இருக்கிறது. இந்திய அணி வானத்தை போல படம் மாதிரி அல்ல. ஒவ்வொரு முறையும் தமிழ்நாடு தனிமைப்படுத்தப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன். எனது அப்பா என்னை ஒரு பேட்ஸ்மேனாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால், நான் ஒரு ஆஃப் ஸ்பின்னர் என்றும், பேட்ஸ்மேன் கிடையாது என்றும் கூறினேன்.

கடந்த 2016 ஆம் ஆண்டு வரையில் தெருவில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறேன் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அஸ்வின் எழுதிய இந்த புத்தகத்தில் தனது சிறு வயதில் காசநோயால் பாதிக்கப்பட்டதாகவும், அதனால், சாப்பிட, தண்ணீர் குடிக்க முடியாமல் தவித்ததாகவும் கூறியுள்ளார்.

Scroll to load tweet…