Asianet News TamilAsianet News Tamil

David Warnerன் சிக்ஸர்: பாண்டிங், வார்ன்-லாம் இப்ப எங்க போனீங்க! சமயம் பார்த்து அடித்த கம்பீர்.. அஷ்வின் ஆதரவு

பாகிஸ்தானுக்கு எதிரான அரையிறுதி போட்டியில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அடித்த சிக்ஸர் ஆட்டத்தின் ஸ்பிரிட்டை கெடுக்கும் விதமாக இருந்ததாக கருத்து தெரிவித்த கம்பீர், அஷ்வின் மன்கட் ரன் அவுட் செய்தபோது, அது ஆட்டத்தின் ஸ்பிரிட் இல்லை விமர்சித்த பாண்டிங், ஷேன் வார்ன் எல்லாம் இப்போது எங்கே போனீர்கள் என்று கம்பீர் கேள்வியெழுப்ப, அதற்கு அஷ்வின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
 

ravichandran ashwin supports gautam gambhir opinion on david warner sixer against pakistan in t20 world cup semi final
Author
Dubai - United Arab Emirates, First Published Nov 12, 2021, 7:07 PM IST

டி20 உலக கோப்பை தொடரில் பாகிஸ்தான் - ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி போட்டி சுவாரஸ்யமாக இருந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் அணி, முகமது ரிஸ்வான் (52 பந்தில் 67 ரன்கள்)  மற்றும் ஃபகர் ஜமான் (32 பந்தில் 55 ரன்கள்) ஆகிய இருவரின் அதிரடி அரைசதங்கள் மற்றும் பாபர் அசாமின் பொறுப்பான பேட்டிங் (39) ஆகியவற்றால் 20 ஓவரில் 176 ரன்களை குவித்து 177 ரன்கள் என்ற சவாலான இலக்கை ஆஸ்திரேலியாவிற்கு நிர்ணயித்தது. 

ஆஸ்திரேலிய அணி, டேவிட் வார்னர் (49) மற்றும் மார்கஸ் ஸ்டோய்னிஸின் (40) பொறுப்பான பேட்டிங் மற்றும் கடைசி நேர மேத்யூ வேடின் காட்டடி பேட்டிங் (17 பந்தில் 41 ரன்கள்) ஆகியவற்றால் 19வது ஓவரிலேயே  177 ரன்கள் என்ற இலக்கை எட்டி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று ஃபைனலுக்கு முன்னேறியது.

இந்த போட்டியில் வார்னர் அடித்த ஒரு சிக்ஸர் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களையும் வியப்பில் ஆழ்த்தியது. ஆஸ்திரேலியா பேட்டிங்கின்போது, முகமது ஹஃபீஸ் வீசிய 8வது ஓவரின் முதல் பந்து அவரது கையிலிருந்து வழுக்கிக்கொண்டு சென்றதால், இரண்டு முறை பிட்ச் ஆனதுடன் லெக் ஸ்டம்பை விட்டு வெகுதூரம் விலகி வெளியே சென்றது. ஸ்ட்ரீட் கிரிக்கெட்டில் வீசுவதைவிட மோசமான பந்தாக இருந்தாலும், அதையும் விடாமல் விரட்டிச்சென்று சிக்ஸர் அடித்தார் வார்னர். 

அதை வார்னர் அடிக்கவில்லை என்றால் டெட் பால் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால் பவுலரின் கையிலிருந்து வெளிவந்த பின்னர் அந்த பந்து எப்படி சென்றாலும், அதை அடிப்பது பேட்ஸ்மேன் அடிப்பது அவரது உரிமை. எனவே அந்தவகையில், வார்னரின் ஷாட்டுக்கு சிக்ஸர் கொடுக்கப்பட்டது. அந்த ஷாட் ரசிகர்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியது. அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

வார்னரின் இந்த ஷாட் விவாதப்பொருளாக உருவான நிலையில், வார்னரின் ஷாட் ஆட்டத்தின் ஸ்பிரிட்டை மீறிய செயல் என்று விமர்சித்தார் கம்பீர். பவுலர் பந்தை வீசவேயில்லை; பவுலரின் கையிலிருந்து தவறிவந்த பந்தை சிக்ஸருக்கு அடித்த வார்னரின் செயல் வெட்கக்கேடானது என்று விமர்சித்த கம்பீர், இதுதொடர்பாக என்ன சொல்கிறீர்கள் அஷ்வின் என கேள்வியெழுப்பியிருந்தார்.

ஐபிஎல்லில் அஷ்வின் பட்லரை மன்கட் முறையில் ரன் அவுட் செய்தார். அஷ்வின் செய்த ரன் அவுட், ஐசிசி விதிப்படி சரியானதுதான் என்றாலும், ஆட்ட ஸ்பிரிட்டுக்கு எதிரானது என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் ரிக்கி பாண்டிங் மற்றும் ஷேன் வார்ன் ஆகியோர் விமர்சித்திருந்தனர். அதை சுட்டிக்காட்டிய கம்பீர், இப்போது எங்கே போனார்கள். மற்ற நாட்டு வீரர்கள் மன்கட் செய்தால் வரிந்துகட்டிக்கொண்டு வருவது எளிது. அதே தங்கள் சொந்த நாட்டு வீரர்கள் செய்தால் நீங்கள் எதுவும் பேசமாட்டீர்கள் என்று நறுக் நறுக் என கேள்வியெழுப்பினார் கம்பீர்.

கம்பீரின் கருத்து தவறானது என்று ஆஸ்திரேலிய பத்திரிகையாளர் ஒருவர் டுவீட் செய்ய, அதற்கு அஷ்வின் விளக்கமளித்தார். அதாவது, கம்பீர் என்ன சொல்கிறார் என்றால், அது(மன்கட் ரன் அவுட்) சரி என்றால் இதுவும்(வார்னர் அடித்த ஷாட்) சரி.. அது தவறென்றால் இதுவும் என்றால் இதுவும் தவறுதான் என்கிறார் கம்பீர்.. கம்பீரின் பார்வை சரியானதுதான் என்று அஷ்வின் விளக்கமளித்தார்.
 

Follow Us:
Download App:
  • android
  • ios