208 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை பிரித்த அஸ்வின் - விழவே வேணானுன்ன இருந்த விக்கெட், ஒன்னுக்கு ஒன்னு ப்ரீ!

நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு, ரவிச்சந்திரன் அஸ்வின், இந்தியாவில் முதல் சதம் அடித்து சாதனை படைத்த கேமரூன் க்ரீன் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார்.

Ravichandran Ashwin Breaks 208 Runs Partnership after take Cameron Green Wicket Against Australia

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான கடைசி பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் தற்போது இந்தியாவில் நடந்து வருகிறது. 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதையடுத்து, இரு அணிகளுக்கு இடையிலான கடைசி டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்தில் நடந்து வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பேட்டிங் செய்து விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஆஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் எடுத்திருந்தது. இதில், உஸ்மான் கவாஜா 104 ரன்களுடனும், கேமரூன் க்ரீன் 49 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.

ரோகித் சர்மா சாதனையை முறியடித்து நம்பர் 1 இடம் பிடித்த உஸ்மான் கவாஜா!

இந்திய அணி:

ரோஹித் சர்மா (கேப்டன்), ஷுப்மன் கில், புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎஸ் பரத் (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அக்ஸர் படேல், ரவிச்சந்திரன் அஷ்வின், உமேஷ் யாதவ், முகமது ஷமி.

முதல் முறையாக இந்தியாவுக்கு டூர் வந்த கேமரூன் க்ரீன் - பவுண்டரியுடன் முதல் சதமடித்து சாதனை!

ஆஸ்திரேலிய அணி:

டிராவிஸ் ஹெட், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லபுஷேன், ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்கம்ப்,  கேமரூன் க்ரீன், அலெக்ஸ் கேரி (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், நேதன் லயன், டாட் மர்ஃபி, குன்னெமன்.

இதையடுத்து இருவரும் 2ஆம் நாள் ஆட்டத்தை தொடங்கினர். ஆனால், இருவரும் கையில் கறுப்பு நிற பட்டை அணிந்து களமிறங்கினர். ஆஸ்திரேலிய டெஸ்ட் கேப்டன் பேட் கம்மின்ஸின் தாயார் மரியா கம்மின்ஸ் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அவர்கள் இவ்வாறு செய்துள்ளனர். இன்றைய போட்டியின் முதல் ஓவரிலேயே க்ரீன் ஒரு ரன் எடுத்து தனது அரைசதத்தை பூர்த்தி செய்தார். இதையடுத்து இருவரும் ஒவ்வொரு ரன்னாக எடுத்தனர். தேவைப்படும் போது பவுண்டரியும் விளாசினர்.

பிரதமர் மோடி - ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸுக்கு கொடுக்கப்பட்ட ஓவியத்தில் என்ன ஸ்பெஷல் தெரியுமா.?

ஒரு கட்டத்தில் உஸ்மான் கவாஜா 121 ரன்கள் எடுத்திருந்த போது 2023 ஆம் ஆண்டில் பார்டர் கவாஸ்கர் டிராபி தொடரில், அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் நம்பர் 1 இடம் பிடித்து ரோகித் சர்மா சாதனையை முறியடித்துள்ளார். இதற்கு முன்னதாக முதல் டெஸ்ட் போட்டியில் ரோகித் சர்மா 120 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது கவாஜா அவரது அதிகபட்ச ரன் சாதனையை முறியடித்து நம்பர் 1 இடம் பிடித்து விளையாடி வருகிறார். 

ஒரு கட்டத்தில் 4 விக்கெட் இழப்பிற்கு ஆஸ்திரேலியா 170 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கவாஜா மற்றும் க்ரீன் ஜோடி சேர்ந்து இந்திய பவுலர்களை திணற வைத்தனர். அஸ்வின், ஜடேஜா, உமேஷ் யாதவ், ஷமி, அக்‌ஷர் படேல் என்று யார் பௌலிங் போட்டாலும் இவர்களது விக்கெட்டை கைப்பற்ற முடியவில்லை. இந்த நிலையில், 130 ஆவது ஓவரின் 2ஆவது பந்தில் ரவிச்சந்திரன் அஸ்வின், க்ரீன் விக்கெட்டை கைப்பற்றியுள்ளார். கவாஜா மற்றும் க்ரீன் இருவரும் இணைந்து 208 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்துள்ளனர்.

ஆஸ்திரேலியா 347 ரன்கள் குவிப்பு: கவாஜா 150*, க்ரீன் 95* - இந்த கூட்டணியை பிரிக்க யாராலயும் முடியல!

இதற்கு முன்னதாக, 1979/80 ஆம் ஆண்டுகளில் ஹக்ஸ் மற்றும் பார்டர் இருவரும் இணைந்து 222 ரன்கள் எடுத்திருந்தனர். இதே போன்று 1959/60 ஆம் ஆண்டுகளில் ஓ நீல் மற்றும் ஹர்வே இருவரும் இணைந்து 207 ரன்க்ள் பார்ட்னர்ஷிப் அமைத்துக் கொடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. நீண்ட நேர போராட்டத்திற்குப் பிறகு க்ரீன் விக்கெட்டை கைப்பற்றிய அஸ்வினுக்கு, அடுத்து வந்த அலெக்ஸ் கேரி விக்கெட்டும் கிடைத்துள்ளது. தற்போது வரையில் ஆஸ்திரேலியா 6 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது. இதில், கவாஜா 165 ரன்களுடன் விளையாடி வருகிறார்.

பேட் கம்மின்ஸ் தாயார் மறைவு - கறுப்பு பட்டை அணிந்து களமிறங்கிய ஆஸி, வீரர்கள்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios