Asianet News TamilAsianet News Tamil

கவாஸ்கர், சச்சின், கோலியை விட ஒரு படி மேல்.. இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் அவருதான்..!

பேட்டிங் டெக்னிக்கின் அடிப்படையில், இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் யார் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீஃப் தெரிவித்துள்ளார்.
 

rashid latif says that rahul dravid is the best indian batsman
Author
Pakistan, First Published Jun 6, 2020, 3:03 PM IST

இந்தியாவில் கவாஸ்கர், சச்சின், கோலி ஆகிய மூவரும் அவரவர் தலைமுறையின் தலைசிறந்த வீரர்களாக அறியப்படுகின்றனர். கபில் தேவ், குண்டப்பா விஸ்வநாத், அசாருதீன், ராகுல் டிராவிட், கங்குலி, சேவாக், யுவராஜ் சிங், லட்சுமணன், தோனி, ரோஹித் சர்மா ஆகியோரும் இந்தியாவின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர்.

ரன்கள், சதங்கள் மற்றும் சாதனைகளின் அடிப்படையில், கவாஸ்கர், சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி தான் சிறந்த பேட்ஸ்மேன்களாக திகழ்கின்றனர். ஆனால் ரன்களை கடந்து, பேட்டிங் டெக்னிக்கிலும், நெருக்கடியை சமாளித்து ஆடும் மன வலிமையின் அடிப்படையிலும் இந்தியாவின் தலைசிறந்த பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட் தான் என்று பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் ரஷீத் லதீஃப் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து பேசியுள்ள ரஷீத் லதீஃப், பேட்டிங் டெக்னிக் மற்றும் நெருக்கடியான சூழலில் அழுத்தத்தை சமாளித்து ஆடுவது ஆகியவற்றின் அடிப்படையில், இந்தியாவில் மற்ற அனைத்து பேட்ஸ்மேன்களையும் விட ராகுல் டிராவிட் ஒரு படி மேல். ராகுல் டிராவிட், சேவாக் ஆகியோர் சச்சின் டெண்டுல்கரின் நிழலில் தான் ஆடினர்.

rashid latif says that rahul dravid is the best indian batsman

சச்சின் டெண்டுல்கர் தன்னம்பிக்கை வாய்ந்தவர். தொடக்கம் முதலே அடித்து ஆடுவார். அதற்காக டிராவிட்டிடம் அந்த திறமை இல்லை என்று நான் கூறவில்லை. ஆனால், டிராவிட்டின் ரோல் என்பது வேறு மாதிரியானது. இந்திய அணி 2 விக்கெட்டுகளை விரைவில் இழந்துவிட்டால், அந்த போட்டியில் ராகுல் டிராவிட் தான் அணியின் நம்பிக்கை நட்சத்திரம், ஹீரோ எல்லாமே.. அதனால் தான் டிராவிட், இந்திய அணியின் சுவர் என்று அழைக்கப்படுகிறார்.

சச்சின், சேவாக், கங்குலியுடன் அதிகமான பார்ட்னர்ஷிப் அமைத்து பெரிய ஸ்கோர் அடித்த வீரர்களில் ராகுல் டிராவிட் பெயர் தான் நிறைய இருக்கும். ராகுல் டிராவிட் ஸ்கோர் செய்யாத ஒரு அந்நிய நாட்டை சொல்லிவிடுங்கள் பார்ப்போம்.. அவர் ஸ்கோர் செய்யாத இடமே கிடையாது. ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து என அனைத்து நாடுகளிலும் ஸ்கோர் செய்திருக்கிறார் என்று ராகுல் டிராவிட்டை புகழ்ந்திருக்கிறார்.

rashid latif says that rahul dravid is the best indian batsman

ஆல்டைம் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் இந்தியாவின் ராகுல் டிராவிட். 1996லிருந்து 2012ம் ஆண்டுவரை இந்திய அணியில் ஆடிய ராகுல் டிராவிட், ஒருநாள் மற்றும் டெஸ்ட் என மொத்தமாக 509 சர்வதேச போட்டிகளில் ஆடி, 24208 ரன்களுடன் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்த 6வது வீரராக திகழ்கிறார்.

சுயநலமாக ஒரு இன்னிங்ஸ் கூட ஆடாத வீரர் ராகுல் டிராவிட். அணியின் நலனையும் வெற்றியையும் மட்டுமே குறிக்கோளாக கொண்டு ஆடியவர். ராகுல் டிராவிட் டெக்னிக்கலாக மிகச்சிறந்த பேட்ஸ்மேன். சச்சின் டெண்டுல்கருக்கு எந்தவிதத்திலும் சளைத்தவர் அல்ல ராகுல் டிராவிட். சச்சின், தோனி மாதிரியான வீரர்கள் ஓவராக தூக்கி கொண்டாடப்பட்டதால், ராகுல் டிராவிட்டின் பெரும் பொதுவெளியில் பெரிதாக பேசப்படவில்லை. 

rashid latif says that rahul dravid is the best indian batsman

ஸ்டிரைட் டிரைவ், கவர் டிரைவ், ஸ்வீப் ஷாட், ஃப்ளிக் ஷாட், ரிவர்ஸ் ஸ்வீப் ஷாட், புல் ஷாட், கட் ஷாட், ஹூக் ஷாட் என அனைத்து விதமான ஷாட்டுகளையும் சிறப்பாக ஆடக்கூடியவர். அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடவல்லவர் என்பதால், ஃபாஸ்ட் - ஸ்பின் - மீடியம் ஃபாஸ்ட் என எந்தவிதமான பவுலிங்கும் அவரை பெரியளவில் டார்ச்சர் செய்ததில்லை.

தனது கெரியரில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், மெக்ராத், சமிந்தா வாஸ், முத்தையா முரளிதரன், ஷேன் வார்ன், சக்லைன் முஷ்டாக், ஆலன் டொனால்ட், பிரெட் லீ, ஷோயப் அக்தர், ஷேன் பாண்ட் என உலகின் பல தலைசிறந்த மற்றும் மிரட்டலான பவுலர்களை எல்லாம் திறம்பட எதிர்கொண்டு ஆடி, அவர்களின் பாராட்டையும் பெற்றவர் ராகுல் டிராவிட் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

Follow Us:
Download App:
  • android
  • ios