IPL 2023: 1000வது போட்டி MI vs RR டாஸ் ரிப்போர்ட்! MI அணியில் 2 அதிரடி மாற்றங்கள்.. RR அணியில் போல்ட் கம்பேக்
ஐபிஎல்லின் 1000வது போட்டியில் மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
ஐபிஎல் 16வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், ஐபிஎல்லின் 1000வது போட்டியில் மும்பை இந்தியன்ஸ் - ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன. புள்ளி பட்டியலில் 2ம் இடத்தில் இருக்கும் ராஜஸ்தான் அணியும், கீழிலிருந்து 2ம் இடத்தில் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன.
மும்பை வான்கடேவில் நடக்கும் ஐபிஎல்லின் 1000வது போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டிங்கை தேர்வு செய்தார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணீயில் டிரெண்ட் போல்ட் திரும்ப வந்ததால் ஆடம் ஸாம்பா நீக்கப்பட்டுள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் 2 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜேசன் பெஹ்ரண்டார்ஃப் மற்றும் அர்ஜுன் டெண்டுல்கர் ஆகிய இருவரும் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக ஜோஃப்ரா ஆர்ச்சர் மற்றும் அர்ஷத் கான் ஆகிய இருவரும் ஆடுகின்றனர்.
IPL 2023: டெல்லி அணியின் படுமட்டமான தோல்விகளுக்கு வார்னர் தான் காரணம்..! ஹர்பஜன் சிங் கடும் விளாசல்
மும்பை இந்தியன்ஸ் அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷன், கேமரூன் க்ரீன், சூர்யகுமார் யாதவ், டிம் டேவிட், திலக் வர்மா, ஜோஃப்ரா ஆர்ச்சர், பியூஷ் சாவ்லா, குமார் கார்த்திகேயா, ரைலீ மெரிடித், அர்ஷத் கான்.
IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்..! பலமடையும் ரோஹித் சர்மா படை
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:
யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஜோஸ் பட்லர், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன்), ஷிம்ரான் ஹெட்மயர், ஜேசன் ஹோல்டர், த்ருவ் ஜுரெல், ரவிச்சந்திரன் அஷ்வின், யுஸ்வேந்திர சாஹல், சந்தீப் ஷர்மா, டிரெண்ட் போல்ட்.