லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவரில் 165 ரன்கள் அடித்து 166 ரன்கள் என்ற இலக்கை லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸுக்கு நிர்ணயித்துள்ளது. 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. மும்பை வான்கடேவில் நடந்துவரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ஜோஸ் பட்லர், வாண்டர் டசன், தேவ்தத் படிக்கல், சஞ்சு சாம்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஷிம்ரான் ஹெட்மயர், ரியான் பராக், ரவிச்சந்திரன் அஷ்வின், குல்தீப் சென், டிரெண்ட் போல்ட், பிரசித் கிருஷ்ணா, யுஸ்வேந்திர சாஹல்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

கேஎல் ராகுல் (கேப்டன்), குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), மார்கஸ் ஸ்டோய்னிஸ், தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, க்ருணல் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கிருஷ்ணப்பா கௌதம், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய், ஆவேஷ் கான்.

முதலில் பேட்டிங் ஆடிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தொடக்க வீரர் ஜோஸ் பட்லர் 13 ரன்னில் ஆட்டமிழந்தார். 29 பந்தில் 29 ரன்கள் அடித்து தேவ்தத் படிக்கல்லும் ஆட்டமிழந்தார். சஞ்சு சாம்சன் 13 ரன்னிலும், வாண்டர் டசன் 4 ரன்னிலும் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். அதன்பின்னர் ஷிம்ரான் ஹெட்மயர் அடித்து ஆட, அவருடன் இணைந்து நன்றாக ஆடிய அஷ்வின் 23 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 28 ரன்கள் அடித்து ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார்.

சிக்ஸர்களாக விளாசி அரைசதம் அடித்த ஷிம்ரான் ஹெட்மயர் 36 பந்தில் ஒரு பவுண்டரி மற்றும் 6 சிக்ஸர்களுடன் 59 ரன்கள் அடித்து கடைசி வரை களத்தில் நின்று ராஜஸ்தான் அணி 165 ரன்களை அடிக்க உதவினார். 150 ரன்களை எட்டினாலே பெரிய விஷயம் என்று இருந்த ராஜஸ்தான் அணியை 165 ரன்களை எட்டவைத்தார் ஹெட்மயர்.