ராஜஸ்தான் ராயல்ஸ் அணி கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டு, கேப்டனாக சஞ்சு சாம்சனை நியமித்துள்ளது.
ஐபிஎல் 14வது சீசனின் ஏலத்திற்கு முன், அனைத்து அணிகளும் தேவையில்லாத வீரர்களை கழட்டிவிட்டு, தேவையான வீரர்களை தக்கவைத்துள்ளது. அந்தவகையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்தையே கழட்டிவிட்டுள்ளது. அடுத்த சீசனில் சஞ்சு சாம்சன் தான் கேப்டனாக நியக்கப்பட்டுள்ளார்.
வருண் ஆரோன், ஒஷேன் தாமஸ், அங்கித் ராஜ்பூத், டாம் கரன் ஆகியோரை கழட்டிவிட்டுள்ளது.
ராஜஸ்தான் ராயல்ஸ் கழட்டிவிட்ட வீரர்கள்:
ஸ்டீவ் ஸ்மித், வருண் ஆரோன், டாம் கரன், அங்கித் ராஜ்பூத், அனிருதா ஜோஷி, ஷேஷான்க் சிங், ஒஷேன் தாமஸ், ஆகாஷ் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்த வீரர்கள்:
ராபின் உத்தப்பா, பென் ஸ்டோக்ஸ், சஞ்சு சாம்சன்(கேப்டன், விக்கெட் கீப்பர்), ஜோஸ் பட்லர், ரியான் பராக், ராகுல் டெவாட்டியா, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஷ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, டேவிட் மில்லர், மனம் வோஹ்ரா, ஜெய்தேவ் உனாத்கத், ஆண்ட்ரூ டை, மஹிபால் லோம்ரார், மயன்க் மார்கண்டே, அனுஜ் ராவட், யஷஸ்வி ஜெய்ஸ்வால்.
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Jan 20, 2021, 11:03 PM IST