ஐபிஎல்லில் கடந்த 2 சீசன்களாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் ஆடியுள்ளார் ஆர்ச்சர். அவரை வரப்போகும் சீசனுக்கும் தக்கவைத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி.

இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஃபாஸ்ட் பவுலரான ஆர்ச்சர், காயம் காரணமாக அவ்வப்போது அணிக்கு வருவதும் போவதுமாக இருந்துவருகிறார். தென்னாப்பிரிக்காவில் நடந்துவரும் தொடரில் கூட ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே ஆடினார். அதன்பின்னர் காயத்தால் 3 டெஸ்ட் போட்டிகளில் ஆடாத ஆர்ச்சர், டி20 தொடருக்கான அணியிலிருந்தும் நீக்கப்பட்டார். 

இந்நிலையில், அவருக்கு ஸ்கேன் செய்து பார்த்ததில் முழங்கையில் முறிவு ஏற்பட்டிருப்பது தெரிகிறது. எனவே இலங்கைக்கு எதிராக இங்கிலாந்து ஆடவுள்ள கிரிக்கெட் தொடரிலும் ஐபிஎல்லிலும் ஆர்ச்சர் ஆடமாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பவுலரான ஆர்ச்சர் ஆடாதது அந்த அணிக்கு பெரிய இழப்பு. அதுமட்டுமல்லாமல் அவர் ஐபிஎல்லில் ஆடாத தகவலை அறிந்து ரசிகர்களும் சோகத்தில் மூழ்கியுள்ளனர். 

Also Read - 2வது ஒருநாள் போட்டி.. இந்திய அணியில் அதிரடி மாற்றங்கள்.. தூக்கியெறியப்படும் வீரர்கள்

ஆர்ச்சர் இல்லாத ராஜஸ்தான் ராயல்ஸ் அணி:

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தக்கவைத்த வீரர்கள்:

ஸ்டீவ் ஸ்மித், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர், சஞ்சு சாம்சன், மாஹிபால் லோம்ரார், மனன் வோரா, ரியான் பராக், ஷேஷான்க் சிங், வருண் ஆரோன், ஷ்ரேயாஸ் கோபால். (ஜோஃப்ரா ஆர்ச்சரும் தக்கவைக்கப்பட்டார். அவர் ஆடாததால் அவரது பெயர் சேர்க்கப்படவில்லை)

ஏலத்திற்கு முன் மற்ற அணிகளிடமிருந்து பெறப்பட்ட வீரர்கள்:

ராகுல் டெவாட்டியா, அன்கித் ராஜ்பூட், மயன்க் மார்கண்டே.

ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள்:

ராபின் உத்தப்பா, ஜெய்தேவ் உனாத்கத், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், டேவிட் மில்லர், டாம் கரன், ஆண்ட்ரூ டை, ஒஷேன் தாமஸ், கார்த்திக் தியாகி, அனுஜ் ராவத், அனிருதா அசோக் ஜோஷி, ஆகாஷ் சிங்.