Asianet News TamilAsianet News Tamil

ஒருநாள் உலகக் கோப்பையை இழந்த இந்திய அணி ராகுல் டிராவிட்டுக்காக டி20 உலகக் கோப்பையை வெல்லுமா?

இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்த இந்திய அணியானது, தலைமை பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்காக டி20 உலகக் கோப்பை தொடரை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.

Rahul Dravid's Tenure as Team Indias Head Coach to an end tomorrow rsk
Author
First Published Jun 28, 2024, 10:30 PM IST

இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான ராகுல் டிராவிட்டின் பதவிக்காலம் நாளை ஜூன் 29ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதன் காரணமாக இந்த தொடரில் இந்திய அணி டிராபியை வென்று கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இந்தியாவில் நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட்டில் இந்திய அணியானது ஆஸ்திரேலியாவிடம் தோல்வி அடைந்து டிராபியை இழந்தது.

இந்த நிலையில் தான் நாளை இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டி நாளை பார்படோஸில் நடைபெறுகிறது. இந்தப் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று டி20 உலகக் கோப்பை டிராபியை கைப்பற்றி அதனை ராகுல் டிராவிட்டிற்கு நினைவுப் பரிசாக கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால், இந்தப் போட்டியானது மழையின் காரணமாக பாதிக்கப்பட வாய்ப்பிருக்கிறது. ரிசர்வ் டேயிலும் மழை பெய்யக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தொடரில் இரு அணிகளும் விளையாடிய எல்லா போட்டிகளிலும் வெற்றி பெற்று தற்போது இறுதி போட்டி வரை வந்துள்ளன.

இதற்கு முன்னதாக இரு அணிகளும் மோதிய 26 டி20 போட்டிகளில் இந்தியா 14 போட்டியிலும், தென் ஆப்பிரிக்கா 11 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு போட்டிக்கு முடிவு எட்டப்படவில்லை. கடைசியாக நடைபெற்ற 5 போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா 3-2 என்று வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இதுவரையில் பார்படோஸ் மைதானத்தில் நடைபெற்ற 50 டி20 போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி 31 போட்டியிலும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 16 போட்டியிலும் வெற்றி பெற்றுள்ளது. மேலும், இந்த மைதானத்தின் சராசரி முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 138 ரன்கள் மட்டுமே ஆகும். அதோடு சராசரி 2ஆவது இன்னிங்ஸ் ஸ்கோர் 125 ரன்கள் மட்டுமே ஆகும்.

மேலும், அதிகபட்ச ஸ்கோர் 224/5 ஆகும். குறைந்தபட்ச ஸ்கோர் 43/10 ஆகும். சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் 172/6 ரன்கள் ஆகும். அதோடு 106/8 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற அணியும் உண்டு. பார்படோஸில் நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி 181/8 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் விளையாடிய ஆப்கானிஸ்தான் 134 ரன்கள் மட்டுமே எடுத்து 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆனால், தென் ஆப்பிரிக்கா இந்த மைதானத்தில் ஒரு போட்டியில் கூட விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மைதானத்தில் முதலில் பேட்டிங் செய்யும் அணி அதிக வெற்றிகளை குவித்துள்ள நிலையில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தால் வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios