Asianet News TamilAsianet News Tamil

ராகுல் டிராவிட்டையே அச்சுறுத்திய பவுலர் ஒருவர் இருக்காருனா அது அவருதான்..!

இந்திய அணியின் முன்னாள் லெஜண்ட் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட்டையே ஒரு பவுலர் பவுன்ஸரில் மிரட்டிய சம்பவத்தை பார்ப்போம்.
 

rahul dravid reveals that he afraid of steyn bouncers
Author
Chennai, First Published Jun 6, 2020, 11:22 PM IST

ராகுல் டிராவிட் ஆடிய காலத்தில் அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்று எதிரணி பவுலர்களையும் கேப்டன்களையும் ஏங்கவைத்தவர். மெக்ராத், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், பிரெட் லீ, ஷோயப் அக்தர், சமிந்தா வாஸ், மலிங்கா, ஸ்டெய்ன் என அவர் ஆடிய காலத்தில் பல திறமையான மற்றும் அதிவேகமாக வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர்.
 
இக்கட்டான பல சூழல்களில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுகிறார். அனைத்து வெளிநாடுகளிலும் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட், ஓய்விற்கு பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்காகவே உழைத்து வருகிறார். 

கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன்களில் ஒருவர் ராகுல் டிராவிட். டிராவிட் மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர். ஆஃப் டிரைவ், ஸ்கொயர் கட், லேட் கட், புல் ஷாட், ஃப்ளிக் ஷாட், ஸ்டிரைட் டிரைவ், ஸ்வீப் ஷாட் என பேட்டிங்கின் அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர் ராகுல் டிராவிட்.

உலகின் ஸ்டைலான பேட்ஸ்மேனும் டிராவிட் தான். டிராவிட் பேட்டிங் ஆடுவதை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். மிகவும் ஸ்டைலாக ஆடுவார். அதிலும் பேக் ஃபூட்டில் ஆஃப் திசையில் அவர் அறையும் ஷாட் அபாரமானது. ராகுல் டிராவிட் அவரது கெரியரில் எந்தவொரு சூழலிலும் சுயநலமாக ஆடியதே கிடையாது. அணிக்காக மட்டுமே தனது கெரியர் முழுவதும் ஆடியவர். 

இந்திய அணிக்காக ஒரு வீரராக தனது முழு பங்களிப்பை அளித்த டிராவிட், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய அணிக்காக உழைத்துவருகிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக செயல்பட்டு இளம் வீரர்களை உருவாக்கும் மகத்தான பணியை செய்த டிராவிட், தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக இருக்கிறார்.

ராகுல் டிராவிட் ஆடிய காலத்தில் அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்று எதிரணி பவுலர்களையும் கேப்டன்களையும் ஏங்கவைத்தவர். அப்பேர்ப்பட்ட டிராவிட், ஒரு பவுலரின் பவுன்ஸருக்கு பயப்பட்டதாக ஒருமுறை தெரிவித்திருக்கிறார். 

அது யார் என்று அவரே சொன்னதை பார்ப்போம். ”வெறும் வேகம் மட்டுமல்லாது அருமையாக ஸ்விங் செய்யக்கூடியவர் ஸ்டெய்ன். புது பந்தில் மிகவும் அபாரமாக வீசுவார். இன் ஸ்விங், அவுட் ஸ்விங், ரிவர்ஸ் ஸ்விங் என அனைத்து ஸ்விங்கும் செய்யக்கூடியவர். அவர் ஆக்ரோஷமாக இருக்கும்போதுதான் மிகவும் சிறப்பாக வீசுவார். ஸ்டெய்ன் எனக்கு பவுன்ஸர் போடும்போது, நான் கொஞ்சம் கூட யோசிக்காமல் விட்டுவிடுவேன். ஏனெனில் அவரது பவுன்ஸரை எதிர்கொள்ளும்போது என் கட்டுப்பாட்டில் எதுவுமே இருக்காது. அதனால் அப்படியே விட்ருவேன் என்று டிராவிட் தெரிவித்துள்ளார்.  
 

Follow Us:
Download App:
  • android
  • ios