Asianet News TamilAsianet News Tamil

இந்த காலத்து பவுலர்களில் உங்களுக்கு யார் டஃப் கொடுப்பாங்கனு நெனக்கிறீங்க..? ராகுல் டிராவிட்டின் நேர்மையான பதில்

உலகின் ஸ்டைலான பேட்ஸ்மேனும் டிராவிட் தான். டிராவிட் பேட்டிங் ஆடுவதை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். மிகவும் ஸ்டைலாக ஆடுவார். அதிலும் பேக் ஃபூட்டில் ஆஃப் திசையில் அவர் அறையும் ஷாட் அபாரமானது. ராகுல் டிராவிட் அவரது கெரியரில் எந்தவொரு சூழலிலும் சுயநலமாக ஆடியதே கிடையாது. அணிக்காக மட்டுமே தனது கெரியர் முழுவதும் ஆடியவர். 

rahul dravid picks rabada and bhuvneshwar kumar may give tough to him
Author
India, First Published Jul 23, 2019, 2:05 PM IST

இக்கட்டான பல சூழல்களில் இந்திய அணியின் நம்பிக்கையாக இருந்து அணிக்கு வெற்றிகளை தேடிக்கொடுத்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் தடுப்புச்சுவர் என்று அழைக்கப்படுகிறார். அனைத்து வெளிநாடுகளிலும் சதமடித்த இந்திய வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரர். இந்திய அணியிலிருந்து ஓய்வு பெற்ற ராகுல் டிராவிட், ஓய்விற்கு பிறகும் இந்திய கிரிக்கெட்டுக்காகவே உழைத்து வருகிறார். 

கிரிக்கெட்டின் ஜெண்டில்மேன்களில் ஒருவர் ராகுல் டிராவிட். டிராவிட் மிகச்சிறந்த பேட்டிங் டெக்னிக்கை கொண்ட வீரர். ஆஃப் டிரைவ், ஸ்கொயர் கட், லேட் கட், புல் ஷாட், ஃப்ளிக் ஷாட், ஸ்டிரைட் டிரைவ், ஸ்வீப் ஷாட் என பேட்டிங்கின் அனைத்துவிதமான ஷாட்டுகளையும் ஆடக்கூடியவர் ராகுல் டிராவிட்.

rahul dravid picks rabada and bhuvneshwar kumar may give tough to him

உலகின் ஸ்டைலான பேட்ஸ்மேனும் டிராவிட் தான். டிராவிட் பேட்டிங் ஆடுவதை பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். மிகவும் ஸ்டைலாக ஆடுவார். அதிலும் பேக் ஃபூட்டில் ஆஃப் திசையில் அவர் அறையும் ஷாட் அபாரமானது. ராகுல் டிராவிட் அவரது கெரியரில் எந்தவொரு சூழலிலும் சுயநலமாக ஆடியதே கிடையாது. அணிக்காக மட்டுமே தனது கெரியர் முழுவதும் ஆடியவர். 

rahul dravid picks rabada and bhuvneshwar kumar may give tough to him

இந்திய அணிக்காக ஒரு வீரராக தனது முழு பங்களிப்பை அளித்த டிராவிட், ஓய்வு பெற்ற பிறகும் இந்திய அணிக்காக உழைத்துவருகிறார். அண்டர் 19 மற்றும் இந்தியா ஏ அணிகளின் பயிற்சியாளராக இருக்கும் டிராவிட், இளம் வீரர்களை உருவாக்கும் மகத்தான பணியை செய்து கொண்டிருக்கிறார். 

ராகுல் டிராவிட் ஆடிய காலத்தில் அவரது விக்கெட்டை வீழ்த்திவிட்டால் போதும் என்று எதிரணி பவுலர்களையும் கேப்டன்களையும் ஏங்கவைத்தவர். மெக்ராத், வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ், பிரெட் லீ, ஷோயப் அக்தர், சமிந்தா வாஸ், மலிங்கா என அவர் ஆடிய காலத்தில் பல திறமையான மற்றும் அதிவேகமாக வீசக்கூடிய ஃபாஸ்ட் பவுலர்களை எதிர்கொண்டு ஆடியவர். 

rahul dravid picks rabada and bhuvneshwar kumar may give tough to him

அப்படிப்பட்ட திறமையான பேட்ஸ்மேனான டிராவிட்டிடம், இந்த காலத்து பவுலர்களில் யார் உங்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் என்று நினைக்கிறீர்கள்? என ஒரு நிகழ்ச்சியில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த டிராவிட், இரண்டு பவுலர்களின் பெயர்களை குறிப்பிட்டார். ஒருவர், தென்னாப்பிரிக்க ஃபாஸ்ட் பவுலர் ரபாடா. மற்றொருவர் இந்திய பவுலர் புவனேஷ்வர் குமார். ஸ்விங்கிற்கு பெயர்போன புவனேஷ்வர் குமாரின் ஸ்விங்கை குறிப்பிட்டுத்தான் டிராவிட், புவனேஷ்வர் குமாரின் பெயரை சொன்னார்.  
 
Follow Us:
Download App:
  • android
  • ios