கரீபியன் பிரீமியர் லீக் தொடர் வெஸ்ட் இண்டீஸில் நடந்துவருகிறது. இதில் ஜமைக்கா தல்லாவாஸ் மற்றும் செயிண்ட் லூசியா ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி கிங்ஸ்டனில் நேற்று நடந்தது. 

இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய ஜமைக்கா அணியின் தொடக்க வீரர் கெய்ல் முதல் பந்திலேயே அவுட்டானார். கெய்ல் கோல்டன் டக்காகி வெளியேற, மற்றொரு தொடக்க வீரரான க்ளென் ஃபிலிப்ஸ் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 34 பந்துகளில் 58 ரன்களை குவித்தார் ஃபிலிப்ஸ். ஃபிலிப்ஸை தவிர ரோவ்மன் பவல் மட்டுமே சிறப்பாக ஆடினார். பவல் 22 பந்துகளில் 44 ரன்களை குவிக்க, அந்த அணி 20 ஓவர் முடிவில் 170 ரன்களை குவித்தது. ஃபிலிப்ஸ், பவல் தவிர வேறு யாருமே சரியாக ஆடவில்லை. அதிரடி வீரர் ஆண்ட்ரே ரசலுக்கு தலையில் அடிபட்டதால், மூன்றே பந்துகளில் அவர் ரிட்டயர்ட் ஹர்ட் ஆனார். 

171 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய செயிண்ட் லூசியா அணியின் தொடக்க வீரர் கார்ன்வால், தொடக்கம் முதலே அடித்து ஆடினார். பவுண்டரியும் சிக்ஸருமாக பறக்கவிட்டார் கார்ன்வால். மற்றொரு தொடக்க வீரரான ஃப்ளெட்சரும் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து நன்றாக ஆடினார். 

செயிண்ட் லூசியா அணியின் தொடக்க வீரர்கள் இருவருமே பயங்கரமாக ஆடினார். அதிலும் கார்ன்வாலின் அடி காட்டடி. ஓவருக்கு 2 சிக்ஸர்கள் விளாசி அதிரடியாக ஆடிய கார்ன்வால், வெறும் 30 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களுடன் 75 ரன்களை குவித்து 9வது ஓவரின் நான்காவது பந்தில் ஆட்டமிழந்தார். 9வது ஓவரிலேயே கார்ன்வால் ஆட்டமிழந்துவிட்டார். ஆனால் அவர் அடித்த ரன்கள் 75. அந்தளவிற்கு செம அடி அது. ஃப்ளெட்சர் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். 36 பந்துகளில் அவர் 47 ரன்கள் அடித்தார். 

இவர்கள் இருவரும் அமைத்து கொடுத்த அதிரடியான அடித்தளத்தால் செயிண்ட் லூசியா அணியின் வெற்றி எளிதானது. 9வது ஓவரில் கார்ன்வால் முதல் விக்கெட்டாக அவுட்டாகும்போதே, செயிண்ட்  லூசியா அணியின் ஸ்கோர் 111. எனவே 17வது ஓவரிலேயே 171 ரன்கள் என்ற இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது செயிண்ட் லூசியா அணி. 

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்படக்கூடிய கார்ன்வாலுக்கு அடுத்த ஐபிஎல் சீசனில் கடும் கிராக்கி இருக்கும்.