Asianet News TamilAsianet News Tamil

உலக கோப்பையில் இந்தியாவின் வாய்ப்பு எப்படி..? எந்தெந்த அணிகள் அரையிறுதியில் மோதும்..? ரஹானே அதிரடி

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. 

rahane speaks about world cup
Author
India, First Published May 14, 2019, 12:25 PM IST

உலக கோப்பை மே மாதம் 30ம் தேதி தொடங்குகிறது. உலக கோப்பையில் ஆடும் அனைத்து அணிகளும் அறிவிக்கப்பட்டு விட்டன. இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகிய 2 அணிகளில் ஒன்றுதான் இந்த உலக கோப்பையை வெல்லும் என்று பல முன்னாள் வீரர்கள் ஆருடம் தெரிவித்துள்ளனர். 

விராட் கோலி தலைமையிலான இந்திய அணி கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக ஆடிவருகிறது. இந்திய அணியில் முன்னெப்போதையும் விட ஃபாஸ்ட் பவுலிங் யூனிட் வலுவாக உள்ளது. பும்ரா, புவனேஷ்வர் குமார், ஷமி ஆகியோர் எதிரணிகளை தெறிக்கவிடுகின்றனர். குல்தீப் - சாஹல் ஜோடி ஸ்பின்னில் மிரட்டுகிறது. இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்டிங்கும் வலுவாக உள்ளது.

rahane speaks about world cup

அதேபோல இயன் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணி கடந்த சில ஆண்டுகளாக ஒருநாள் போட்டிகளில் ஆக்ரோஷமாக ஆடிவருகிறது. இயன் மோர்கன், ஜேசன் ராய், பட்லர், பேர்ஸ்டோ, ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் என அந்த அணி நல்ல பலம் வாய்ந்த சிறப்பான அணியாக இருப்பதுடன் உலக கோப்பை இங்கிலாந்தில் நடப்பது, அந்த அணிக்கு கூடுதல் பலம். அதனால் உலக கோப்பையை இங்கிலாந்து வெல்வதற்கான வாய்ப்புகள் தான் பிரகாசமாக இருப்பதாக பல முன்னாள் ஜாம்பவான்கள் பார்க்கின்றனர்.

rahane speaks about world cup

ஸ்மித் மற்றும் வார்னர் அணிக்கு திரும்பியிருப்பதால் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலிய அணியும் கோப்பையை மீண்டும் வெல்லும் முனைப்பில் உள்ளது. அந்த அணி பேட்டிங், பவுலிங் என சமபலம் வாய்ந்த அணியாக உள்ளது. பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகளும் சிறந்த அணிகள் தான். 

இவ்வாறு ஒவ்வொரு அணியுமே சிறந்த அணியாக திகழும் நிலையில், பல முன்னாள் வீரர்களும் தங்களது கணிப்பை தெரிவித்துவருகின்றனர். இந்நிலையில் உலக கோப்பை குறித்து பேசியுள்ள ரஹானே, உலக கோப்பை தொடரை இந்திய அணி வெற்றிகரமாக தொடங்கினால் அந்த மூம்ண்ட்டத்தை விட்டுவிடக்கூடாது. தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும். ஏனெனில் உலக கோப்பை போன்ற பெரிய தொடரில் எந்த அணியும் எப்போது வேண்டுமானாலும் ஃபார்முக்கு வரலாம். அதனால் தொடர்ந்து சிறப்பாக ஆடுவது அவசியம். 

rahane speaks about world cup

இந்திய அணியில் ஃபாஸ்ட் மற்றும் ஸ்பின் பவுலிங் என இரண்டுமே அபாரமாக உள்ளது. விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறன் வாய்ந்த பவுலர்களை நாம் பெற்றிருக்கிறோம். எந்த சூழலிலும் விக்கெட்டுகளை வீழ்த்தக்கூடிய திறன் பெற்ற பவுலர்கள் இந்திய அணியில் உள்ளனர். மேலும் இங்கிலாந்தில் அவர்கள் ஆடியுள்ளதால் இங்கிலாந்து சூழல் நமது பவுலர்களுக்கு தெரியும். 

இந்திய அணி வலுவாக உள்ளது. உலக கோப்பையை பொறுத்தமட்டில் எதையும் உறுதியாக கூறமுடியாது. எனினும் இந்திய அணியை தவிர சொல்ல வேண்டுமானால், இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய அணிகள் ஐசிசி தொடர்களில் சிறப்பாக ஆடக்கூடிய அணிகள். வெஸ்ட் இண்டீஸ் அணி கணிக்க முடியாத அணி. அவர்கள் எப்போது எப்படி ஆடுவார்கள் என்பதை கணிக்கவே முடியாது என்று ரஹானே தெரிவித்தார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios