லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். 

ஐபிஎல் 15வது சீசனின் இன்றைய போட்டியில் மயன்க் அகர்வால் தலைமையிலான பஞ்சாப் கிங்ஸூம், கேஎல் ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸும் மோதுகின்றன. புனேவில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் மயன்க் அகர்வால் ஃபீல்டிங்கை தேர்வு செய்தார்.

இந்த போட்டிக்கான பஞ்சாப் கிங்ஸ் அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே ஆடும் லெவன் காம்பினேஷனுடன் களமிறங்கியுள்ளது.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

ஷிகர் தவான், மயன்க் அகர்வால் (கேப்டன்), பானுகா ராஜபக்சா, லியாம் லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோ, ஜித்தேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்), ரிஷி தவான், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், சந்தீப் ஷர்மா.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 3ம் வரிசையில் இறங்கிவந்த மனீஷ் பாண்டே, அதிரடியாக ஆடி பெரிய ஸ்கோர்களை செய்வதில்லை. அவரது பேட்டிங் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. எனவே பவுலிங் யூனிட்டை வலுப்படுத்தும் விதமாக மனீஷ் பாண்டே நீக்கப்பட்டு ஆவேஷ் கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:

குயிண்டன் டி காக் (விக்கெட் கீப்பர்), கேஎல் ராகுல் (கேப்டன்), தீபக் ஹூடா, ஆயுஷ் பதோனி, மார்கஸ் ஸ்டோய்னிஸ், ஜேசன் ஹோல்டர், க்ருணல் பாண்டியா, ஆவேஷ் கான், மோசின் கான், துஷ்மந்தா சமீரா, ரவி பிஷ்னோய்.