Asianet News TamilAsianet News Tamil

IPL 2023: பரபரப்பான போட்டியில் கடைசி பந்தில் PBKS த்ரில் வெற்றி! ஐபிஎல் வரலாற்றில் CSK இப்படி தோற்றதே இல்லை

சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 201 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணி கடைசி பந்தில் இலக்கை எட்டி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
 

punjab kings thrill win against csk in last ball in ipl 2023
Author
First Published Apr 30, 2023, 8:11 PM IST

ஐபிஎல் 16வது சீசனில் ஞாயிற்றுக்கிழமையான இன்று 2 போட்டிகள் நடக்கின்றன. இரவு 7.30 மணிக்கு தொடங்கி நடந்துவரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. 

பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்த போட்டியில் சிஎஸ்கே மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடந்த போட்டியில் டாஸ் வென்ற சிஎஸ்கே கேப்டன் தோனி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

சிஎஸ்கே அணி:

ருதுராஜ் கெய்க்வாட், டெவான் கான்வே, அஜிங்க்யா ரஹானே, மொயின் அலி, அம்பாதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, தோனி (கேப்டன்), மதீஷா பதிரனா, துஷார் தேஷ்பாண்டே, மஹீஷ் தீக்‌ஷனா.

பஞ்சாப் கிங்ஸ் அணி:

அதர்வா டைட், ஷிகர் தவான் (கேப்டன்), லியாம் லிவிங்ஸ்டோன், சிக்கந்தர் ராஸா, சாம் கரன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஹர்ப்ரீத் பிரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங்

IPL 2023: டெல்லி அணியின் படுமட்டமான தோல்விகளுக்கு வார்னர் தான் காரணம்..! ஹர்பஜன் சிங் கடும் விளாசல்

முதலில் பேட்டிங் ஆடிய சிஎஸ்கே அணியின் தொடக்க வீரர்கள் ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் டெவான் கான்வே ஆகிய இருவரும் இணைந்து அபாரமாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 9.4 ஓவரில் 86 ரன்களை குவித்தனர். 37 ரன்களுக்கு ருதுராஜ் கெய்க்வாட் ஆட்டமிழக்க, 3ம் வரிசையில் இறங்கிய ஷிவம் துபே 17 பந்தில் 28 ரன்கள் அடித்தார்.

தொடக்கம் முதலே அதிரடியாக பேட்டிங் ஆடிய டெவான் கான்வே அரைசதம் அடித்தார். மொயின் அலி 10 ரன்களுக்கும், ஜடேஜா 12 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். அரைசதத்திற்கு பின்னரும் அதிரடியாக ஆடி சதத்தை நெருங்கிய டெவான் கான்வேவால் கடைசி வரை களத்தில் இருந்தும் சதமடிக்க முடியவில்லை. 92 ரன்களுடன் கடைசிவரை களத்தில் இருந்தார் டெவான் கான்வே. கடைசி ஓவரின் கடைசி 2 பந்திலும் சிக்ஸர் அடித்து தோனி சிறப்பாக முடித்து கொடுக்க, 20 ஓவரில் 200 ரன்களை குவித்தது சிஎஸ்கே அணி.

201 ரன்கள் என்ற கடினமான இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் ஷிகர் தவான் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகிய இருவரும் இணைந்து அதிரடியாக ஆடி நல்ல தொடக்கத்தை அமைத்து கொடுத்தனர். ஷிகர் தவான் 15 பந்தில் 28 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடித்து ஆடிய பிரப்சிம்ரன் சிங் 24 பந்தில் 42 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். 

அதர்வா டைட் 17 பந்தில் 13 ரன்கள் மட்டுமே அடித்தார். லியாம் லிவிங்ஸ்டோன் 24 பந்தில் 4 சிக்ஸருடன் 40 ரன்களும், சாம் கரன் 29 ரன்களும் அடித்தனர். 10 பந்தில் 21 ரன்கள் அடித்து நம்பிக்கையளித்த ஜித்தேஷ் ஷர்மாவும் கடைசிவரை நின்று போட்டியை முடித்து கொடுக்காமல் ஆட்டமிழந்தார். கடைசி ஓவரில் பஞ்சாப் கிங்ஸுக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், முதல் 2 பந்தில் சிக்கந்தர் ராஸா மற்றும் ஷாருக்கான் ஆகிய இருவரும் சிங்கிள் அடிக்க, 3வது பந்தில் ராஸா ரன் அடிக்கவில்லை. எனவே கடைசி 3 பந்தில் 7 ரன்கள் தேவைப்பட்டது. அடுத்த 2 பந்திலும் தலா 2 ரன்கள் அடித்த, சிக்கந்தர் ராஸா, கடைசி பந்தில் தேவையான 3 ரன்களை அடித்து பஞ்சாப் கிங்ஸுக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார்.

IPL 2023: மும்பை இந்தியன்ஸ் அணியில் இணைந்த இங்கிலாந்து ஆல்ரவுண்டர்..! பலமடையும் ரோஹித் சர்மா படை

சிஸ்கே அணி 200 ரன்கள் அடித்து தோற்றதேயில்லை. முதல் முறையாக சிஎஸ்கேவிற்கு எதிராக 201 ரன்கள் என்ற இலக்கை அடித்து பஞ்சாப் கிங்ஸ் சாதனை வெற்றி பெற்றது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios