இந்தியாவின் டெஸ்ட் ஸ்பெஷலிஸ்ட் பேட்ஸ்மேன் புஜாரா. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா உள்ளிட்ட சவாலான வெளிநாடுகளிலும் சிறப்பாக ஆடி இந்திய அணியின் வெற்றிகளுக்கு முக்கிய காரணமாக திகழ்ந்துவருபவர் புஜாரா.

இங்கிலாந்துக்கு எதிராக இந்தியாவில் நடந்துவரும் டெஸ்ட் தொடரில், 3 போட்டிகள் முடிந்துள்ள நிலையில், இதுவரை இந்த தொடர் புஜாராவுக்கு நல்ல தொடராக அமையவிலை. முதல் டெஸ்ட்டில் 73 ரன்கள் அடித்த புஜாரா, கடைசி 4 இன்னிங்ஸ்களில் 15, 21, 7 மற்றும் 0 என படுமோசமாக சொதப்பியுள்ளார்.

எனவே வரும் 4ம் தேதி தொடங்கும் கடைசி டெஸ்ட்டை பெரிதும் எதிர்நோக்கியுள்ளார் புஜாரா. கடைசி டெஸ்ட்டில் 55 ரன்கள் அடித்தால், சச்சின் டெண்டுல்கரே செய்யாத சாதனை பட்டியலில் இணைவார் புஜாரா.

இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 955 ரன்கள் அடித்துள்ள புஜாரா, கடைசி டெஸ்ட்டில் 45 ரன்கள் அடித்தால் இந்திய மண்ணில் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்கள் அடித்த 4வது இந்திய வீரர் என்ற சாதனையை படைப்பார்.

இதற்கு முன்பாக இந்த மைல்கல்லை கவாஸ்கர், குண்டப்பா விஸ்வநாத், விராட் கோலி ஆகிய மூவர் மட்டுமே எட்டியுள்ளனர். மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் கூட இந்தியாவில் இங்கிலாந்துக்கு எதிராக 1000 ரன்கள் அடித்ததில்லை. புஜாரா இன்னும் 45 ரன்கள் அடித்தால் சச்சின் டெண்டுல்கரே செய்யாத சாதனை பட்டியலில் இணைவார்.