பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணியை ஒரு ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி லாகூர் காலண்டர்ஸ் அணி த்ரில் வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடர் தொடங்கி நடந்துவருகிறது. இந்த சீசனின் முதல் போட்டியில் முல்தான் சுல்தான்ஸ் அணியும், லாகூர் காலண்டர்ஸ் அணியும் மோதின. முல்தானில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற முல்தான் சுல்தான்ஸ் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது.
முல்தான் சுல்தான்ஸ் அணி:
ஷான் மசூத், முகமது ரிஸ்வான் (கேப்டன், விக்கெட் கீப்பர்), உஸ்மான் கான், கைரன் பொல்லார்டு, டேவிட் மில்லர், குஷ்தில் ஷா, அகீல் ஹுசைன், உஸாமா மிர், சமீன் குல், ஷாநவாஸ் தஹானி, ஈசானுல்லா.
பாபர் அசாமை தூக்கிட்டு பாகிஸ்தான் அணியின் அடுத்த கேப்டனாக இவரை நியமிங்க..! ஹசன் அலி அதிரடி
லாகூர் காலண்டர்ஸ் அணி:
ஃபகர் ஜமான், ஷேய் ஹோப் (விக்கெட் கீப்பர்), மிர்ஸா தாஹிர் பைக், காம்ரான் குலாம், ஹுசைன் டலட், சிக்கந்தர் ராஸா, டேவிட் வீஸா, லியாம் டாவ்சன், ஹாரிஸ் ராஃப், ஷாஹீன் அஃப்ரிடி (கேப்டன்), ஜமான் கான்.
முதலில் பேட்டிங் ஆடிய லாகூர் காலண்டர்ஸ் அணியின் தொடக்க வீரர் ஃபகர் ஜமான் அதிரடியாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். 42 பந்தில் 66 ரன்கள் அடித்தார் ஜமான். மிர்ஸா 32 ரன்களும், பின்வரிசையில் டலட் 12 பந்தில் 20 ரன்களும் அடிக்க, 20 ஓவரில் 175 ரன்கள் அடித்தது லாகூர் காலண்டர்ஸ் அணி.
IND vs AUS: முதல் டெஸ்ட்டுக்கு முன்பே கணித்த பாண்டிங்.. கண்டுக்காம தோல்வியை தழுவிய ஆஸ்திரேலியா
176 ரன்கள் என்ற இலக்கை விரட்டிய முல்தான் சுல்தான்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் முகமது ரிஸ்வான் மற்றும் ஷான் மசூத் ஆகிய இருவரும் இணைந்து சிறப்பாக ஆடி முதல் விக்கெட்டுக்கு 100 ரன்களை சேர்த்தனர். ஷான் மசூத் 35 ரன்கள் அடித்தார். அரைசதம் அடித்த ரிஸ்வான் 50 பந்தில் 75 ரன்களை குவித்தார். அதன்பின்னர் டேவிட் மில்லர்(25), கைரன் பொல்லார்டு(20) ஆகியோர் சொதப்பினர். இலக்கை மிகத்தீவிரமாக விரட்டிய முல்தான் அணி 20 ஓவரில் 174 ரன்கள் அடித்து ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த சீசனின் முதல் போட்டியில் லாகூர் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.
