MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs AFG Test: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்! மாஸ் காட்டிய மானவ் சுதார்! யார் இந்த 'குட்டி' ஜடேஜா!

IND vs AFG Test: அறிமுக போட்டியிலேயே 7 விக்கெட்! மாஸ் காட்டிய மானவ் சுதார்! யார் இந்த 'குட்டி' ஜடேஜா!

IND vs AFG Test: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றி பெற்றது. அறிமுக போட்டியிலேயே 6 விக்கெட் வீழ்த்திய மானவ் சுதார் யார்? என்பது குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar r
Published : Jun 08 2026, 05:36 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
 ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; இந்திய அணி வெற்றி
Image Credit : Social Media

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட்; இந்திய அணி வெற்றி

கேப்டன் சுப்மன் கில், கே.எல். ராகுல் ஆகியோரின் அசத்தல் சதங்கள் மற்றும் அறிமுக சுழற்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் மானவ் சுதரின் அபாரமான பவுலிங்கால் ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒரே டெஸ்ட் போட்டியில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியைப் பதிவு செய்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் எடுத்து டிக்ளே செய்து. கேப்டன் சுப்மன் கில் (126 ரன்), கே.எல். ராகுல் (100) அட்டகாசமான சதம் விளாசினார்கள். சாய் சுதர்சன் (81), ரிஷப் பண்ட் (81) மற்றும் வாஷிங்டன் சுந்தர் (52) அரைசதம் விளாசினார்கள்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மானவ் சுதார் 7 விக்கெட்; ஆட்டநாயகன்
Image Credit : X

மானவ் சுதார் 7 விக்கெட்; ஆட்டநாயகன்

பின்பு முதல் இன்னிங்சை விளையாடிய ஆப்கானிஸ்தான் அணி வெறும் 152 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் அறிமுக வீரர் மானவ் சுதார் தான் விளையாடிய முதல் போட்டியிலேயே 22 ஓவர்களில் 10 மெய்டன்களுடன் 33 ரன்கள் மட்டுமே கொடுத்து 6 விக்கெட்டுகள் சாய்த்தார். பாலோ ஆன் ஆனதால் 2வது இன்னிங்சில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி 112 ரன்களில் சுருண்டு படுதோல்வி அடைந்தது. 

இதனால் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் மெகா வெற்றியை பெற்றது. வாஷிங்டன் சுந்தர் 4 விக்கெட்டுகளும், குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்கள். முதல் இன்னிங்சில் 6 விக்கெட்டுகளும், 2வது இன்னிங்சில் 1 விக்கெட்டும் வீழ்த்திய மானவ் சுதார் அறிமுக போட்டியிலேயே ஆட்டநாயகன் விருது வென்றார்.

Related Articles

Related image1
IND vs AFG Test: இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்தியா பிளேயிங் லெவன்! அறிமுக வீரர்களுக்கு ஜாக்பாட்!
Related image2
IND vs AFG: கில், ராகுல் சதம், பொளந்து கட்டும் பௌலர்கள்.. 2 நாளில் ஆஃப்கானிஸ்தானை திணறடித்த இந்தியா!
34
அறிமுக போட்டியிலேயே அசத்தல் பவுலிங்
Image Credit : Social Media

அறிமுக போட்டியிலேயே அசத்தல் பவுலிங்

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ரன்கள் அடிப்படையில் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றியாக இது பதிவாகியுள்ளது. இதற்கு முன்பு 2018-ல் ராஜ்கோட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 272 ரன்கள் வித்தியாசத்தில் பெற்ற வெற்றியே சாதனையாக இருந்தது. அந்த சாதனையை இந்த மாபெரும் வெற்றியின் மூலம் இந்தியா முறியடித்துள்ளது. 

பவுலிங்கில் கலக்கிய மானவ் சுதார் அறிமுக டெஸ்டில் 5 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்திய 10-வது இந்திய பந்துவீச்சாளர் மற்றும் 7-வது இந்திய சுழற்பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றார். 1988-ல் வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக நரேந்திர ஹிர்வானி 61 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியதற்குப் பிறகு, ஒரு இந்திய வீரரின் இரண்டாவது சிறந்த அறிமுக டெஸ்ட் பந்துவீச்சு இதுவாகும்.

44
யார் இந்த மானவ் சுதார்?
Image Credit : Getty

யார் இந்த மானவ் சுதார்?

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த மானவ் சுதார் 2022-23 ரஞ்சி டிராபி தொடரில் வெறும் 6 போட்டிகளில் 39 விக்கெட்டுகளைக் குவித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். இதுவரை 29 ஃபர்ஸ்ட் கிளாஸ் போட்டிகளில் 129 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இந்தியா 'ஏ' அணிக்காக விளையாடிய போது ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிராக 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

மேலும் துலீப் டிராபியிலும் ஒரே இன்னிங்ஸில் 7 விக்கெட்டுகளை வீழ்த்தி தேர்வுக்குழுவினரைத் தன் பக்கம் திரும்ப வைத்தார். கடந்த 2023 உலகக்கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு நெட் பவுலராகச் சென்றார். அங்கு ரோஹித் சர்மா, விராட் கோலி போன்ற சீனியர் வீரர்களுக்குப் பந்துவீசி அவர்களின் பாராட்டுகளைப் பெற்றார். இப்போது தனது திறமையால் இந்திய அணியில் இடம்பிடித்து முதல் போட்டியிலேயே தான் யார் என்பதை நிரூபித்துள்ளார்.

About the Author

RR
Rayar r
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
Latest Videos
Recommended Stories
Recommended image1
Suryakumar Yadav: மும்பை இந்தியன்ஸை விட்டு வௌியேறும் சூர்யகுமார் யாதவ்..? இன்ஸ்டாவில் அதிரடி!
Recommended image2
Rishabh Pant: பன்ட் அடிச்ச சிக்ஸால் டிரோன் காலி? வைரல் வீடியோவின் உண்மை என்ன?
Recommended image3
Vaibhav: இந்திய அணியில் வைபவ்.. எகிறிய மதிப்பு.. ஒரு மேட்ச் சம்பளம் தெரிஞ்சா ஆச்சரியப்படுவீங்க!
Related Stories
Recommended image1
IND vs AFG Test: இந்தியா vs ஆப்கானிஸ்தான் டெஸ்ட்: இந்தியா பிளேயிங் லெவன்! அறிமுக வீரர்களுக்கு ஜாக்பாட்!
Recommended image2
IND vs AFG: கில், ராகுல் சதம், பொளந்து கட்டும் பௌலர்கள்.. 2 நாளில் ஆஃப்கானிஸ்தானை திணறடித்த இந்தியா!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved