முதலில் டி20 தொடர் நடந்துவருகிறது. ஹைதராபாத்தில் நடந்த முதல் டி20 போட்டியில் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. அந்த போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் அபாரமாக இருந்தது. பவுலர்களும் நன்றாகத்தான் வீசினார்கள். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள் திறமையாக ஆடி ஸ்கோர் செய்தனர். 

அந்த போட்டியில் இந்திய அணியின் ஃபீல்டிங் மட்டும்தான் சரியில்லை. இந்திய வீரர்கள் ஃபீல்டிங்கில் சொதப்பினர். ஆனால் பேட்டிங் தான் மிகவும் சிறப்பாக இருந்தது. விராட் கோலியும் ராகுலும் அதிரடியாக ஆடி 208 ரன்கள் என்ற கடின இலக்கை எளிதாக எட்டவைத்தனர். கேப்டன் கோலியின் பேட்டிங் வேற லெவலில் இருந்தது. கடைசி வரை களத்தில் நின்று இந்திய அணிக்கு வெற்றியை தேடிக்கொடுத்தார். 

3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என முன்னிலை வகிக்கும் நிலையில், இரண்டாவது போட்டி இன்று திருவனந்தபுரத்தில் நடக்கிறது. இந்த போட்டியிலும் முதல் போட்டியில் ஆடிய அதே அணிதான் களமிறங்கும். இந்திய அணியில் எந்தவித மாற்றமும் செய்யப்பட வாய்ப்பில்லை. 

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், புவனேஷ்வர் குமார், தீபக் சாஹர், சாஹல்.