ஆஸ்திரேலிய அணி 3 ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காக இந்தியாவிற்கு வந்துள்ளது. முதல் போட்டி இன்று மும்பை வான்கடேவில் நடக்கிறது. இரண்டாவது போட்டி 17ம் தேதி ராஜ்கோட்டிலும் கடைசி போட்டி 19ம் தேதி பெங்களூருவிலும் நடக்கிறது. 

முதல் ஒருநாள் போட்டி மும்பை வான்கடேவில் பகலிரவு போட்டியாக நடக்கிறது. மதியம் 1.30 மணிக்கு தொடங்குகிறது. கடந்த முறை இந்தியாவிற்கு வந்தபோது, இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி ஒருநாள் தொடரை வென்றது. எனவே இந்த முறை ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வெல்லும் முனைப்பில் இந்திய அணி உள்ளது. அதேநேரத்தில் கடந்த முறை ஸ்மித், வார்னர் ஆகிய நட்சத்திர வீரர்கள் இல்லாமலேயே தொடரை வென்ற ஆஸ்திரேலிய அணி, இந்த முறை வெற்றிப்பயணத்தை தொடரும் முனைப்பில் உள்ளது. 

ரோஹித், தவான், ராகுல், கோலி - வார்னர், ஃபின்ச், ஸ்மித், லபுஷேன் என இரு அணிகளின் பேட்டிங் ஆர்டரும் வலுவாக உள்ளது. பவுலிங்கிலும் அப்படித்தான்.. பும்ரா, ஷமி, நவ்தீப் சைனி - கம்மின்ஸ், ஸ்டார்க், ஹேசில்வுட் என இரு அணிகளின் பவுலிங்கும் சமபலத்துடன் உள்ளது. எனவே இந்த தொடர் மிகவும் கடினமாக இருக்கும்.

Also Read - சச்சின் டெண்டுல்கரின் அடுத்த சாதனையை காலி செய்யப்போகும் கோலி

இந்த போட்டியில் களமிறங்கும் உத்தேச இந்திய அணியை பார்ப்போம். தவான், ராகுல் ஆகிய இருவருமே ஆடும் லெவனில் இடம்பெற வாய்ப்புள்ளது என்று கேப்டன் கோலி தெரிவித்திருந்தார். எனவே ரோஹித் - தவான் தொடக்க வீரர்களாகவும் ராகுல் மூன்றாம் வரிசையிலும் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனால் கோலி நான்காம் வரிசையிலும் ஷ்ரேயாஸ் ஐயர் ஐந்தாம் வரிசையிலும் அடுத்ததாக ரிஷப் பண்ட்டும் இறங்குவர். 

ஸ்பின் பவுலர்களாக ஜடேஜா மற்றும் குல்தீப் ஆகிய இருவரும் ஃபாஸ்ட் பவுலர்களாக பும்ரா, ஷமி, சைனி ஆகியோரும் இறங்குவர். 

Also Read - ஒட்டுமொத்த உலக கோப்பையிலயே இந்திய அணி எடுத்த மோசமான முடிவு இதுதான்.. அப்ப மிஸ் பண்ணதை இப்ப பார்க்க ஆவலா இருக்கேன்.. கம்பீர் ஆர்வம்

உத்தேச இந்திய அணி:

ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், விராட் கோலி(கேப்டன்), ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், நவ்தீப் சைனி, ஷமி, பும்ரா.