சமகால கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரராக திகழும் விராட் கோலி, சர்வதேச கிரிக்கெட்டில் சதங்களையும் சாதனைகளையும் குவித்துவருகிறார்.  குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட்டில், ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்து புதிய மைல்கல்லை எட்டிவருகிறார். 

சச்சின் டெண்டுல்கர் வசமிருக்கும் பெரும்பாலான பேட்டிங் சாதனைகளை தகர்த்துவரும் விராட் கோலி, அவரது கெரியர் முடிவதற்குள், சச்சினின் அதிக சதங்கள் மற்றும் அதிகமான ரன்கள் ஆகிய சாதனைகளை முறியடித்துவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also Read - ஒட்டுமொத்த உலக கோப்பையிலயே இந்திய அணி எடுத்த மோசமான முடிவு இதுதான்.. அப்ப மிஸ் பண்ணதை இப்ப பார்க்க ஆவலா இருக்கேன்.. கம்பீர் ஆர்வம்

ஒவ்வொரு போட்டியிலும் ஏதாவது ஒரு சாதனையை முறியடிக்கும் விராட் கோலிக்கு, ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியிலும் ஒரு சாதனை காத்துக்கொண்டிருக்கிறது. 

சச்சின் டெண்டுல்கர் இந்திய மண்ணில் ஒருநாள் கிரிக்கெட்டில் 20 சதங்களை அடித்துள்ளார். விராட் கோலி இந்திய மண்ணில் இதுவரை 19 சதங்களை விளாசியுள்ளார். சச்சின் 160 ஒருநாள் இன்னிங்ஸில் 20 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் கோலியோ வெறும் 89 இன்னிங்ஸ்களில் 19 சதங்களை விளாசியிருக்கிறார். எனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் ஒரு சதமடித்தால் சச்சின் சாதனையை சமன் செய்வார். இரண்டு சதமடித்தால் சச்சின் சாதனையை முறியடித்துவிடுவார்.