உலக கோப்பையில் அரையிறுதியில் தோற்று தொடரைவிட்டு வெளியேறிய இந்திய அணி, இங்கிலாந்திலிருந்து நாடு திரும்பியுள்ளது. அடுத்ததாக வெஸ்ட் இண்டீஸுக்கு இந்திய அணி சுற்றுப்பயணம் செல்கிறது. 3 டி20, 3 ஒருநாள் போட்டி மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி ஆடவுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி, வரும் 19ம் தேதி அறிவிக்கப்படவுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் டெஸ்ட் தொடருக்கான அணியில் ப்ரித்வி ஷா இடம்பெறுவது சந்தேகம்தன. கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக இந்தியாவில் நடந்த டெஸ்ட் தொடரில் அறிமுகமான ப்ரித்வி ஷா, அறிமுக இன்னிங்ஸிலேயே சதமடித்து அசத்தினார். அந்த தொடரில் நன்றாக ஆடியதால், ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்திலும் இடம்பெற்றிருந்தார். 

ஆனால் பயிற்சி போட்டியில் காயமடைந்ததால் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆடமுடியாமல் நாடு திரும்பினார். இந்நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவர் இடம்பெற முடியாமல் போகும் நிலை உள்ளது. இதற்கும் காயம் தான் காரணம். தனது காயம் குணமடைந்து இன்னும் தான் 100% உடற்தகுதியை பெறவில்லை எனவும் முழு உடற்தகுதி பெற இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என தெரியவில்லை எனவும் அவரே தெரிவித்ததுள்ளார்.