டெல்லி கேபிடள்ஸ் அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் பிரித்வி ஷா, யோ யோ டெஸ்ட்டில் தேறவில்லை.
இந்திய இளம் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா. 2018ம் ஆண்டு பிரித்வி ஷா தலைமையில் இந்திய அணி அண்டர் 19 உலக கோப்பையை வென்றது. அதே ஆண்டே ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்துக்கான இந்திய டெஸ்ட் அணியில் இடம்பெற்ற பிரித்வி ஷா, காயம் காரணமாக அந்த தொடரில் முழுமையாக ஆடும் வாய்ப்பை இழந்தார்.
பிரித்வி ஷாவின் மோசமான ஃபிட்னெஸ்:
இந்திய அணியில் 19 வயதிலேயே ஆட கிடைத்த அரிய வாய்ப்பை தவறவிட்டார் பிரித்வி ஷா. அதன்பின்னரும் காயம் காரணமாக இந்திய அணியில் அவரால் நிரந்தர இடம்பிடிக்க முடியவில்லை. மிகத்திறமையான பேட்ஸ்மேன் என்றாலும், அவரது ஃபிட்னெஸ் தான் அவருக்கு மிகப்பெரிய எதிரி.
தொடர் காயங்களால் இந்திய அணியில் இடம்பெறமுடியாத பிரித்வி ஷாவின் பெயர், பிசிசிஐயின் வருடாந்திர வீரர்கள் ஒப்பந்த பட்டியலில் இடம்பெறவில்லை.
காயமடைந்த வீரர்கள் அனைவரும் தேசிய கிரிக்கெட் அகாடமியில் ஃபிட்னெஸை நிரூபிக்க அழைக்கப்பட்டார்கள். அதில் பிரித்வி ஷாவும் ஒருவர். ஃபிட்னெஸ் பெற்ற வீரர்கள் யோ யோ டெஸ்ட்டில் தேறவேண்டும்.
யோ யோ டெஸ்ட்டில் தோல்வி:
யோ யோ டெஸ்ட்டில் 16 மதிப்பெண்கள் பெற்றால் தான் தேர்ச்சி. ஆனால் பிரித்வி ஷா 15 மதிப்பெண்கள் மட்டுமே பெற்று யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்தார்.
இதையும் படிங்க - IPL 2022: ஷேன் வாட்சனை பயிற்சியாளராக நியமித்த ஐபிஎல் அணி..! செம மூவ்
ஐபிஎல்லில் டெல்லி கேபிடள்ஸ் அணியில் ஆடும் பிரித்வி ஷா, யோ யோ டெஸ்ட்டில் தோல்வியடைந்ததால் அவர் ஐபிஎல்லில் ஆட முடியுமா என்ற எழலாம். ஆனால் ஐபிஎல்லில் ஆடுவதில் எந்த சிக்கலும் இருக்காது. யோ யோ டெஸ்ட்டில் பிரித்வி ஷா அடைந்த தோல்வி, ஐபிஎல்லில் ஆடுவதில் எந்த பிரச்னையையும் ஏற்படுத்தாது. அவர் ஐபிஎல்லில் விளையாடலாம் என்று பிசிசிஐ தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால் 22 வயதே ஆன பிரித்வி ஷாவால் யோ யோ டெஸ்ட்டில் தேர்ச்சி பெறமுடியவில்லை என்பது அவரது மோசமான ஃபிட்னெஸையே வெளிக்காட்டுகிறது.
