SA20: முத்துசாமியின் சுழலில் சுருண்டது டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ்..! சொற்ப ரன்களுக்கு ஆல் அவுட்
தென்னாப்பிரிக்க டி20 லீக்கில் பிரிட்டோரியா கேபிடள்ஸுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி வெறும் 80 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
தென்னாப்பிரிக்க டி20 லீக் தொடரில் இன்று டர்பனில் நடந்துவரும் போட்டியில் டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் - பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணிகள் ஆடிவருகின்றன. இந்த போட்டியில் டாஸ் வென்ற டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
கைல் மேயர்ஸ், வியான் முல்டர், குயிண்டன் டி காக் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ஹென்ரிச் கிளாசன், ஜேசன் ஹோல்டர், ட்வைன் பிரிட்டோரியஸ், கிறிஸ்டியான் ஜோன்கர், கேஷவ் மஹராஜ், ஹார்டஸ் வில்ஜோயன், சுப்ராயன், ரீஸ் டாப்ளி.
பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி:
ஃபிலிப் சால்ட் (விக்கெட் கீப்பர்), வில் ஜாக்ஸ், தியூனிஸ் டி பிருய்ன், ரைலீ ரூசோ, ஷேன் டாட்ஸ்வெல், ஜேம்ஸ் நீஷம், ஈதன் பாஷ், வைன் பார்னெல் (கேப்டன்), செனுரான் முத்துசாமி, அடில் ரஷீத், அன்ரிக் நோர்க்யா.
முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் அணியில் கைல் மேயர்ஸ், குயிண்டன் டி காக், ஜேசன் ஹோல்டர், ஹென்ரிச் கிளாசன் ஆகிய பெரிய வீரர்கள் இருந்தும் தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் அனைத்து வீரர்களும் மளமளவென ஆட்டமிழந்தனர். கிளாசன் அதிகபட்சமாக 31 ரன்கள் அடித்தார். மற்ற வீரர்கள் அதுகூட அடிக்காமல் ஆட்டமிழந்தனர். பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணியில் அபாரமாக பந்துவீசிய இடது கை ஸ்பின்னர் முத்துசாமி 4 ஓவரில் வெறும் 12 ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளையும் வீழ்த்த, வெறும் 80 ரன்களுக்கு டர்பன் சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி ஆல் அவுட்டானது.
WFI தலைவர் மீதான பாலியல் குற்றச்சாட்டை விசாரிக்க 7 பேர் அடங்கிய கமிட்டி அமைப்பு..! IOA நடவடிக்கை
பிரிட்டோரியா கேபிடள்ஸ் அணி 81 ரன்கள் என்ற மிக எளிய இலக்கை விரட்டுகிறது.