சச்சின் டெண்டுல்கரின் அழகான ஜம்மு மற்றும் காஷ்மீர் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த பிரதமர் மோடி இது இளைஞர்களுக்கு 2 முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கிறது.
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது மகள் சாரா மற்றும் மனைவி அஞ்சலி ஆகியோருடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றுள்ளார். கடந்த 20 ஆம் தேதி தனது குடும்பத்தோடு சுற்றுலா சென்ற சச்சின் ஒவ்வொரு வீடியோவையும் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து வந்தார். அப்படி ஒரு வீடியோவை இன்று பகிர்ந்திருந்தார். இதில், காஷ்மீரில் தனது முக்கியமான தருணங்கள் என்று இன்று ஒரு வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோ பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து இது பார்க்க அற்புதமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார்.
ஜம்மு-காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்!
மேலும், சச்சினின் அழகான ஜம்மு மற்றும் காஷ்மீர் பயணமானது நமது இளைஞர்களுக்கு 2 முக்கியமான கருத்துக்களை எடுத்துரைக்கிறது. முதலாவதாக நம்பமுடியாத இந்தியாவின் பல்வேறு பகுதிகளை கண்டறிவது என்றும், இரண்டாவதாக மேக் இன் இந்தியா என்பதன் முக்கியத்தும் என்றும், ஒன்றாக விக்சித் மற்றும் ஆத்மநிர்பர் பாரதத்தை உருவாக்குவோம் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
