Asianet News TamilAsianet News Tamil

BBL: ஃபைனலில் பிரிஸ்பேன் ஹீட்டை வீழ்த்தி 5வது முறையாக கோப்பையை வென்று பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அபார சாதனை

பிக்பேஷ் லீக் ஃபைனலில் பிரிஸ்பேன் ஹீட்டை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அபார வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5வது முறையாக கோப்பையை வென்று சாதனை படைத்தது. 
 

perth scorchers beat brisbane heat in final and wins 5th title of big bash league
Author
First Published Feb 4, 2023, 5:41 PM IST

பிக்பேஷ் டி20 லீக் தொடரின் ஃபைனல் இன்று பெர்த்தில் நடந்தது. பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் மற்றும் பிரிஸ்பேன் ஹீட் அணிகள் இடையே நடந்த ஃபைனலில் டாஸ் வென்ற பிரிஸ்பேன் ஹீட் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

பிரிஸ்பேன் ஹீட் அணி:

சாம் ஹீஸ்லெட், ஜோஷ் பிரௌன், நேதன் மெக்ஸ்வீனி, சாம் ஹைன், ஜிம்மி பியர்சன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), மேக்ஸ் பிரயண்ட், மைக்கேல் நெசெர், ஜேம்ஸ் பேஸ்லி, சேவியர் பார்ட்லெட், ஸ்பென்சர் ஜான்சன், மேத்யூ குன்னெமேன்.

ரோஹித் கேம்ப், கோலி கேம்ப்னு 2 கேங்கா பிரிந்த இந்திய அணி..! சாமர்த்தியமாக கையாண்ட சாஸ்திரி

பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி:

ஸ்டீஃபன் எஸ்கினாஸி, கேமரூன் பான்கிராஃப்ட், ஆரோன் ஹார்டி, ஜோஷ் இங்லிஸ் (விக்கெட் கீப்பர்), அஷ்டான் டர்னர் (கேப்டன்), நிக் ஹாப்சன், கூப்பர் கானாலி, ஆண்ட்ரூ டை, டேவிட் பெய்ன், ஜேசன் பெஹ்ரண்டார்ஃப், மேத்யூ கெல்லி.
 
முதலில் பேட்டிங் ஆடிய பிரிஸ்பேன் ஹீட் அணியின் தொடக்க வீரர் ஜோஷ் பிரௌன் அதிரடியாக ஆடி 12 பந்தில் 25 ரன்கள் அடித்தார். அதன்பின்னர் 2வது விக்கெட்டுக்கு சாம் ஹீஸ்லெட் மற்றும் மெக்ஸ்வீனி இணைந்து சிறப்பாக பேட்டிங் ஆடி 79 ரன்களை சேர்த்து கொடுத்தனர். ஹீஸ்லெட் 34 ரன்களும், மெக்ஸ்வீனி 41 ரன்களும் அடித்து ஆட்டமிழந்தனர். பின்வரிசையில் மேக்ஸ் பிரயண்ட் அதிரடியாக ஆடி 14 பந்தில் 2 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 31 ரன்கள் அடித்தார். சாம் ஹைன் 21 ரன்கள் அடித்தார். கடைசி பந்தில் பார்ட்லெட் சிக்ஸர் அடித்து முடிக்க, 20 ஓவரில் பிரிஸ்பேன் ஹீட் அணி 175 ரன்கள் அடித்தது.

176 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியின் தொடக்க வீரர்கள் பான்கிராஃப்ட் (15), ஸ்டீஃபன் (21) ஆகிய இருவரும் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர். ஆரோன் ஹார்டி (17) மற்றும் ஜோஷ் இங்லிஸ் (26) ஆகியோரும் சிறிய பங்களிப்பே செய்தனர். 5ம் வரிசையில் இறங்கிய கேப்டன் அஷ்டான் டர்னர் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். 32 பந்தில் 5 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் 53 ரன்கள் அடித்து ரன் அவுட்டானார்.

IND vs AUS: அஷ்வின் மாதிரி ஒரு ஸ்பின்னரை வைத்து வெறித்தனமா பயிற்சி செய்யும் ஆஸ்திரேலிய வீரர்கள்! வைரல் வீடியோ

ஆனால் அதன்பின்னர் கூப்பர் 11 பந்தில் 2 சிக்ஸர்களுடன் 25 ரன்களையும், நிக் ஹாப்சன் 7 பந்தில் 18 ரன்களையும் விளாச, கடைசி ஓவரில் இலக்கை அடித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணி 5வது முறையாக பிக்பேஷ் லீக் கோப்பையை வென்று சாதனையை படைத்தது.

5 முறை பிக்பேஷ் லீக் டைட்டிலை வென்ற அணி என்ற சாதனையை பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் படைத்துள்ளது. பிரிஸ்பேன் ஹீட் அணி 2வது முறையாக கோப்பையை வெல்ல போராடிய போராட்டம் வீணானது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios