பஞ்சாப் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில் களமிறங்கும் இரு அணிகளின் உத்தேச ஆடும் லெவனை பார்ப்போம்.
ஐபிஎல் 15வது சீசன் விறுவிறுப்பாக நடந்துவரும் நிலையில், இன்று மும்பை ப்ரபோர்ன் ஸ்டேடியத்தில் நடக்கும் போட்டியில் பஞ்சாப் கிங்ஸும் குஜராத் டைட்டன்ஸும் மோதுகின்றன.
பஞ்சாப் கிங்ஸ் அணி இதற்கு முன் ஆடிய 3 போட்டிகளில் 2 வெற்றிகளை பெற்றுள்ளது. ஹர்திக் பாண்டியா தலைமையில் புதிதாக களமிறங்கியுள்ள குஜராத் டைட்டன்ஸ் அணி ஆடிய 2 போட்டிகளிலும் அபாரமாக ஆடி வெற்றி பெற்றது.
தவான், மயன்க், லிவிங்ஸ்டோன், ராஜபக்சா, பேர்ஸ்டோ, ஜித்தேஷ் ஷர்மா, ஒடின் ஸ்மித், ஷாருக்கான் என அதிரடி பேட்டிங் ஆர்டரை கொண்ட, பேட்டிங்கில் வலுவான பஞ்சாப் அணியும், ஷமி, ஃபெர்குசன், ரஷீத் கான் என சாம்பியன் பவுலர்களை கொண்ட வலுவான பவுலிங் அணியான குஜராத் அணியும் மோதுவதால் போட்டி மிகக்கடுமையாக இருக்கும்.
இந்த போட்டியில் களமிறங்கும் இரு அணிகளிலும் தலா ஒரு மாற்றம் செய்யப்படலாம். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ராஜபக்சாவுக்கு பதிலாக ஜானி பேர்ஸ்டோ சேர்க்கப்படலாம். அதேபோல, குஜராத் டைட்டன்ஸ் அணியில் அபினவ் மனோகருக்கு பதிலாக குர்கீரத் சிங் மன் இறக்கப்படலாம்.
உத்தேச பஞ்சாப் கிங்ஸ் அணி:
மயன்க் அகர்வால்(கேப்டன்), ஷிகர் தவான், பானுகா ராஜபக்சா/ஜானி பேர்ஸ்டோ, லியாம் லிவிங்ஸ்டோன், ஜித்தேஷ் ஷர்மா, ஷாருக்கான், ஒடீன் ஸ்மித், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், வைபவ் அரோரா, அர்ஷ்தீப் சிங்.
உத்தேச லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணி:
மேத்யூ வேட் (விக்கெட் கீப்பர்), ஷுப்மன் கில், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா (கேப்டன்), டேவிட் மில்லர், ராகுல் டெவாட்டியா, அபினவ் மனோகர்/குர்கீரத் சிங் மன், குகீரத் சிங், ரஷீத் கான், லாக்கி ஃபெர்குசன், வருன் ஆரோன், முகமது ஷமி.
