IND vs ZIM: இந்தியாவை தோற்கடிங்க.. ஜிம்பாப்வே பையனை திருமணம் பண்ணிக்கிறேன்.. பாகிஸ்தான் நடிகை கொடுத்த ஆஃபர்

டி20 உலக கோப்பையில் ஜிம்பாப்வே இந்திய அணியை வீழ்த்தினால், ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்துகொள்கிறேன் என்று பாகிஸ்தான் நடிகை செஹர் ஷின்வாரி தெரிவித்துள்ளார்.
 

Pakistani actress sehar shinwari said that she will marry Zimbabwean guy if they beat India in T20 World Cup

டி20 உலக கோப்பை தொடர் சுவாரஸ்யமான கட்டத்தில் உள்ளது. சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 1 மற்றும் க்ரூப் 2 ஆகிய இரண்டிலுமே தலா 3 அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. இரு க்ரூப்களிலிருந்தும் தலா 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேற முடியும். 

க்ரூப் 1ல் நியூசிலாந்து, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா ஆகிய 3 அணிகளும் தலா 4 போட்டிகளில் ஆடி தலா 5 புள்ளிகளை பெற்றுள்ளது. எனவே 3 அணிகளில் எந்த 2 அணிகள் கடைசி போட்டியில் ஜெயிக்கிறதோ அந்த 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். 3 அணிகளுமே வேறு 3 அணிகளை எதிர்கொள்வதால் ஒருவேளை 3 அணிகளும் ஜெயிக்கும் பட்சத்தில் நெட் ரன்ரேட் அடிப்படையில் 2 அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

IPL 2023: பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு புதிய கேப்டன் நியமனம்.! 16 சீசன்களில் 14 கேப்டன்கள்.. புதிய கோச்களும் நியமனம்

க்ரூப் 2ஐ பொறுத்தமட்டில் 4 போட்டிகளில் ஆடி 6 புள்ளிகளுடன் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது. 4 போட்டிகளில் ஆடி 5 புள்ளிகளுடன் தென்னாப்பிரிக்கா 2ம் இடத்திலும், 4 போட்டிகளில் ஆடி 4 புள்ளிகளுடன் பாகிஸ்தான் 3ம் இடத்திலும் உள்ளன. இந்திய அணி கடைசி போட்டியில் ஜிம்பாப்வேவை எதிர்கொள்வதால் கண்டிப்பாக அந்த போட்டியில் வெற்றி பெற்றுவிடும் என்பதால் இந்தியா அரையிறுதிக்கு முன்னேறிவிடும்.

கடைசி போட்டியில் நெதர்லாந்தை எதிர்கொள்ளும் தென்னாப்பிரிக்க அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றால் 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறும். கடைசி போட்டியில் இந்தியாவும் ஜெயித்து, தென்னாப்பிரிக்காவும் ஜெயித்தால், பாகிஸ்தான் கடைசி போட்டியில் வங்கதேசத்தை வீழ்த்தினாலும் அரையிறுதிக்கு முன்னேற முடியாது.

கடைசி போட்டியில் பாகிஸ்தானும் வெற்றி பெற்று, இந்தியா - தென்னாப்பிரிக்கா அணிகளில் ஒன்று அதன் கடைசி போட்டியில் தோற்றால் பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்புள்ளது. ஆனால் அதற்கு 99.99% வாய்ப்பில்லை.

அந்த வாய்ப்பை உருவாக்கித்தரும் பட்சத்தில், தன்னையே தருவதாக பாகிஸ்தான் நடிகை கூறியுள்ளார். இந்திய அணியை ஜிம்பாப்வே வீழ்த்தி, பாகிஸ்தான் கடைசி போட்டியில் வெற்றி பெற்றால் இரு அணிகளும் தலா 6 புள்ளிகளை பெறும். ஆனால் இந்தியாவின் நெட் ரன்ரேட்டை விட பாகிஸ்தான் நெட் ரன்ரேட் அதிகமாக இருப்பதால் பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறும்.

விராட் கோலியின் ஃபேக் ஃபீல்டிங்.. 5 ரன் கேட்கும் வங்கதேசம்..! சர்ச்சை சம்பவத்தின் வைரல் வீடியோ

எனவே, இந்திய அணியை வீழ்த்தி ஜிம்பாப்வே பாகிஸ்தானுக்கு அரையிறுதி வாய்ப்பை ஏற்படுத்தி தரும் பட்சத்தில், ஜிம்பாப்வே பையனை திருமணம் செய்துகொள்கிறேன் என்று பாகிஸ்தான் பிரபல நடிகை செஹர் ஷின்வாரி டுவீட் செய்துள்ளார். இந்த டுவீட் செம வைரலாகிவருகிறது. 

இது கண்டிப்பாக நடக்காது என்பது தெரிந்து, துணிச்சலாக இந்த கருத்தை கூறியுள்ளார் நடிகை ஷின்வாரி.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios