விராட் கோலியின் ஃபேக் ஃபீல்டிங்.. 5 ரன் கேட்கும் வங்கதேசம்..! சர்ச்சை சம்பவத்தின் வைரல் வீடியோ

டி20 உலக கோப்பையில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விராட் கோலி செய்த ஃபேக் ஃபீல்டிங்கிற்கு 5 ரன் பெனால்டியாக வழங்கியிருக்க வேண்டும் என்று வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன் கூறியிருந்த நிலையில், வங்கதேச ரசிகர்களும் விராட் கோலியை சாடிவருகின்றனர்.
 

bangladesh accuse virat kohli fake fielding in india vs bangladesh match in t20 world cup video goes viral

டி20 உலக கோப்பை சூப்பர் 12 சுற்றில் க்ரூப் 2ல் இடம்பெற்றுள்ள இந்தியா - வங்கதேசம் இடையேயான போட்டி அடிலெய்டில் நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, விராட் கோலி(44 பந்தில் 64 ரன்கள்) மற்றும் கேஎல் ராகுலின் (32 பந்தில் 50 ரன்கள்) அதிரடி அரைசதங்கள் மற்றும் சூர்யகுமார் யாதவின் (16 பந்தில் 30 ரன்கள்) கேமியோவால் 20 ஓவரில் 184 ரன்களை குவித்தது இந்திய அணி.

185 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய வங்கதேச அணியின் தொடக்க வீரர் லிட்டன் தாஸ் அதிரடியாக ஆடி 21 பந்தில் அரைசதம் அடித்தார். அவரது அதிரடி அரைசதத்தால் 7 ஓவரில் விக்கெட் இழப்பின்றி 66 ரன்களை வங்கதேச அணி குவித்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது.

இவர்தான் நமது அடுத்த பும்ரா.. அர்ஷ்தீப் சிங்கிற்கு கேப்டன் ரோஹித் சர்மா மாபெரும் புகழாரம்

மழை காரணமாக 15 ஓவர்களாக ஆட்டம் குறைக்கப்பட்டது. டி.எல்.எஸ் முறைப்படி 16 ஓவரில் 151 ரன்கள் வங்கதேசத்துக்கு இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. மழை முடிந்து களத்திற்கு வந்த லிட்டன் தாஸை ராகுல் ரன் அவுட்டாக்கி அனுப்பினார். 27 பந்தில் 60 ரன்களை குவித்து இந்திய அணியை மிரட்டிவந்த லிட்டன் தாஸை டேரக்ட் த்ரோவின் மூலம் ராகுல் ரன் அவுட்டாக்க, அதன்பின்னர் வங்கதேச பேட்டிங் ஆர்டர் மளமளவென சரிய, 16 ஓவரில் 145 ரன்கள் அடித்து 5 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் தோற்றது.

வங்கதேச இன்னிங்ஸின்போது விராட் கோலி ஃபேக் ஃபீல்டிங் செய்தது சர்ச்சையை கிளப்பியுள்ளது. வங்கதேசம் பேட்டிங்கின்போது 7வது ஓவரின் 3வது பந்தை லிட்டன் தாஸ் அடித்துவிட்டு 2 ரன் ஓட, அந்த பந்தை பிடித்து அர்ஷ்தீப் சிங் த்ரோ அடித்தார். அர்ஷ்தீப் அடித்த த்ரோவில் பந்து விக்கெட் கீப்பரை நோக்கி செல்ல, பந்துக்கு சம்மந்தமே இல்லாமல் நின்ற விராட் கோலி, அந்த பந்தை பிடித்து த்ரோ அடிப்பது போல் சும்மா ஆக்‌ஷன் செய்தார். அதை ஆட்டத்தின்போது அம்பயர் கவனிக்கவில்லை. வங்கதேச வீரர்களும் அப்பீல் செய்யவில்லை. அதனால் ஆட்டத்தின்போது அது சர்ச்சையாகவில்லை.

போட்டிக்கு பின் தான் அது விவாதமாகவும் சர்ச்சையாகவும் உருவெடுத்தது. போட்டிக்கு பின் இதுகுறித்து பேசிய வங்கதேச விக்கெட் கீப்பர் நூருல் ஹசன், அந்த ஃபேக் ஃபீல்டிங்கிற்கு 5 ரன் வழங்கியிருந்தால் ஆட்டம் எங்களுக்கு சாதமாகியிருக்கும். துரதிர்ஷ்டவசமாக அது நடக்கவில்லை என்றார்.

டி20 உலக கோப்பை: நோ-பால் கொடுத்த அம்பயர்.. கோலி - ஷகிப் இடையே ஸ்வீட்டான மோதல்.! வைரல் வீடியோ

ஐசிசி விதிப்படி 41.5ன் படி பேட்ஸ்மேன்களின் கவனத்தை சிதறடிக்கும்படி உள்நோக்கத்துடன் ஏமாற்றக்கூடாது. அந்தவகையில், அதை சுட்டிக்காட்டி விராட் கோலியின் ஃபேக் ஃபீல்டிங்கை வங்கதேச ரசிகர்கள் விமர்சித்துவருவதுடன், 5 ரன் பெனால்டியாக வழங்கியிருந்தால் வங்கதேசம் வெற்றி பெற்றிருக்கும் என்கிற ரீதியிலும், விராட் கோலி நியாயமாக விளையாடுங்கள் என்றும் கருத்து கூறிவருகின்றனர்.
 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios