இங்கிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. 

இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தான் அணி 232 ரன்களை குவித்து, இங்கிலாந்தை 201 ரன்களுக்கு சுருட்டி, 31 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில், 2வது டி20 போட்டி இன்று நடக்கிறது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

லீட்ஸில் நடக்கும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி ஃபீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடிவருகிறது.

இங்கிலாந்து அணியின் கேப்டன் ஒயின் மோர்கன் இந்த போட்டியில் ஓய்வு எடுத்துள்ளார். எனவே அவருக்கு பதிலாக ஜோஸ் பட்லர் கேப்டன்சி பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்துகிறார்.

இங்கிலாந்து அணி:

ஜேசன் ராய், ஜோஸ் பட்லர்(கேப்டன், விக்கெட் கீப்பர்), டேவிட் மலான், மொயின் அலி, லிவிங்ஸ்டோன், ஜானி பேர்ஸ்டோ, டாம் கரன், கிறிஸ் ஜோர்டான், அடில் ரஷீத், சாகிப் மஹ்மூத், மேத்யூ பார்கின்சன்.

பாகிஸ்தான் அணி:

முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), பாபர் அசாம்(கேப்டன்), சொஹைப் மக்சூத், ஃபகர் ஜமான், முகமது ஹஃபீஸ், அசாம் கான், இமாத் வாசிம், ஷதாப் கான், ஷாஹீன் அஃப்ரிடி, ஹாரிஸ் ரௌஃப், முகமது ஹஸ்னைன்.