- Home
- Sports
- Sports Cricket
- Sanju Samson: இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்! 3 இளம் வீரர்களுக்கு இடம்!
Sanju Samson: இந்திய அணியில் இருந்து சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்! 3 இளம் வீரர்களுக்கு இடம்!
Sanju Samson Dropped India Squad for Zimbabwe T20I Series: ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியில் இருந்து உலகக்கோப்பை தொடர் நாயகன் சஞ்சு சாம்சன் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பிரப்சிம்ரன் சிங் உள்பட 3 இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.

Sanju Samson Dropped India Squad for Zimbabwe T20I Series
இங்கிலாந்து டி20 தொடர் முடிவடைந்தவுடன் இந்திய அணி ஜிம்பாப்வேவுக்கு சென்று 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி ஜூலை 23 ஆம் தேதி ஹராரேவில் நடைபெற உள்ளது. இந்த நிலையில், ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று (ஜூலை 6) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
அயர்லாந்து தொடர் மற்றும் இங்கிலாந்து எதிரான முதல் டி20 போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தத் தவறியதால், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான சஞ்சு சாம்சன் இந்திய அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். உலகக்கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சனை ஒரு போட்டியை வைத்து அநியாயமாக நீக்கி விட்டதாக ரசிகர்கள் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் பிசிசிஐக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க:இந்த 2 வீரர்கள் வேஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! இந்தியா தோல்விக்கான 5 காரணங்கள்!
அதிரடி வீரர் பிரப்சிம்ரன் சிங் இடம் பிடித்தார்
இந்திய அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் கேப்டனாகவும், திலக் வர்மா துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஐபிஎல்லில் அதிரடியில் கலக்கிய பஞ்சாப் கிங்ஸ் வீரர் பிரப்சிம்ரன் சிங் மற்றும் இளம் பவுலர்கள் யஷ் தாக்கூர், அசோக் சர்மா அணியில் முதன் முறையாக இடம்பிடித்துள்ளனர். இளம் புயல் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி தனது இடத்தை தக்க வைத்துள்ளார்.
இதேபோல் சூர்யான்ஷ் ஜெட்ஜேவும் தனது இடத்தை கெட்டியாக பிடித்துள்ளார். விக்கெட் கீப்பர்களாக இஷான் கிஷன் மற்றும் பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் அணியில் இடம்பிடித்துள்ளனர். மேலும், ஹர்ஷ் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், மயங்க் யாதவ், ரிங்கு சிங் ஆகியோரும் அணியில் உள்ளனர்.
ஜிம்பாப்வே தொடருக்கான இந்திய டி20 அணி
ஜிம்பாப்வே டி20 தொடருக்கான இந்திய அணி வீரர்கள் பட்டியல்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, திலக் வர்மா (துணை கேப்டன்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷிவம் துபே, பிரப்சிம்ரன் சிங் (விக்கெட் கீப்பர்).சூர்யான்ஷ் ஷெட்ஜே, ரிங்கு சிங், ஹர்ஷ் துபே, வருண் சக்கரவர்த்தி, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்கூர், அசோக் சர்மா மற்றும் மயங்க் யாதவ்.
இதையும் படிங்க: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!
இங்கிலாந்து ஒருநாள் தொடரில் மாற்றம்
இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியிலும் ஒரு முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது. காயமடைந்த நிதிஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக, ஆல்-ரவுண்டர் சிவம் துபே அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. சுப்மன் கில் தலைமையிலான இந்த ஒருநாள் அணியில் ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் என ஒரு வலுவான பட்டாளமே களமிறங்குகிறது.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் அணி:
இங்கிலாந்து ஓடிஐ தொடருக்கான இந்திய வீரர்கள் பட்டியல்: சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஷிவம் துபே, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் குர்னூர் பிரார்.

