- Home
- Sports
- Sports Cricket
- IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
IND vs ENG 1st T20: இந்திய அணியில் 4 வீரர்கள் அதிரடி நீக்கம்! சஞ்சு சாம்சனுமா? பிளேயிங் லெவன்!
IND vs ENG 1st T20: ஜூலை 1 ஆம் தேதி நடக்கும் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணியில் சஞ்சு சாம்சன் உள்பட 4 வீரர்கள் நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவனை பார்ப்போம்.

அயர்லாந்துக்கு டி20 தொடரில் இந்தியா படுதோல்வி
டி20 கிரிக்கெட்டில் கெத்தாக அமர்ந்திருந்த இந்திய அணியை கத்துக்குட்டியான அயர்லாந்து அசால்ட்டாக ஊதித்தள்ளியுள்ளது. மிக முக்கியமான இங்கிலாந்து டி20 தொடருக்கு முன்னதாக அயர்லாந்துக்கு சும்மா பிக்னிக் மாறி சென்று தொடரை வெல்வோம் என தப்புக்கணக்கு போட்ட இந்திய அணிக்கு அயர்லாந்து மரண அடி கொடுத்துள்ளது.
2 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் முதல் போட்டியில் 34 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை தழுவிய இந்திய அணி, 2வது போட்டியில் 1 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. சுமார் 3 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி டி20 தொடரை இழந்துள்ளதால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்தியா, இங்கிலாந்து டி20 தொடர்
இந்திய அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட ஓடிஐ தொடரிலும் விளையாடுகிறது. இதில் முதலாவது டி20 போட்டி இங்கிலாந்தின் டர்ஹாம் கவுன்டியில் உள்ள செஸ்டர்-லெ-ஸ்ட்ரீட்டில் ஜூலை 1 ஆம் தேதி (புதன்கிழமை) தொடங்குகிறது. அயர்லாந்துக்கு எதிராக படுதோல்வியை சந்தித்தால் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் அதிரடி மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சஞ்சு சாம்சன் அதிரடி நீக்கம்
டி20 உலகக்கோப்பை நாயகன் சஞ்சு சாம்சன் இரண்டு போட்டியிலும் சேர்த்து மொத்தமே 5 ரன் தான் எடுத்தார். அவர் அவுட் ஆன விதம் மோசமாக இருந்தது. இதனால் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக இளம் புயல் 15 வயதான வைபவ் சூர்யவன்ஷி இந்திய அணியில் அறிமுகமாக அதிக வாய்ப்புள்ளது.
அபிஷேக் சர்மா, திலக் வர்மா தனது இடத்தை தக்க வைப்பார்கள். இஷான் கிஷன் மோசமாக விளையாடினாலும் அவருக்கு இன்னொரு வாய்ப்பு கிடைக்கும் என கூறப்படுகிறது. கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயரும் படுமோசமாக பேட்டிங் செய்தாலும் கேப்டன் என்பதால் அவரது இடத்துக்கு ஆபத்து இல்லை.
வாஷிங்டன் சுந்தருக்கும் இடமில்லை
அதே வேளையில் அயர்லாந்துக்கு எதிரான முதல் போட்டியில் பேட்டிங், பவுலிங்கில் சொதப்பிய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு இடம் கிடைக்க வாய்ப்பில்லை. 2வது டி20 போட்டியில் ஷிவம் துபே 2 விக்கெட் வீழ்த்தியதால் அவருக்கு இடம் உறுதியாக வாய்புள்ளது. அயர்லாந்து தொடரில் அறிமுக வீரராக களம் கண்ட சூர்யான்ஷ் ஷெட்ஜ்க்கும் இடம் கிடைக்காது. ஸ்பின் பவுலிங்கை பொறுத்தவரை வருண் சக்கரவர்த்தி அல்லது ரவி பிஷ்னோய் மற்றும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல் இடம்பெறுவா
இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்
பாஸ்ட் பவுலிங்கை பொறுத்தவரை ரன்களை வாரி வழங்கிய பிரசித் கிருஷ்ணா நீக்கப்படுகிறார். அவருக்கு பதிலாக 2வது டி20 போட்டியில் அறிமுக வீரராக களமிறங்கி 3 விக்கெட் வீழ்த்திய பிரின்ஸ் யாதவ் இடம்பெறுவார். இதேபோல் பேட்டிங், பவுலிங்கில் அசத்தும் ஹர்சித் ராணா மற்றும் ஸ்விங் கிங் அர்ஷ்தீப் சிங்குக்கு இடம் கிடைக்கும்.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷே சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, இஷான் கிஷன், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், ஹர்சித் ராணா, பிரின்ஸ் யாதவ், அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி அல்லது ரவி பிஷ்னோய்.

