MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Sports
  • Sports Cricket
  • IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!

IND vs ENG 3rd T20: வேஸ்ட் லக்கேஜ்! 2 வீரர்கள் நீக்கம்! சஞ்சு சாம்சன் கம்பேக்! இந்தியா பிளேயிங் லெவன்!

IND vs ENG 3rd T20: இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணியில் 2 வீரர்கள் நீக்கப்படுகின்றனர். சஞ்சு சாம்சன் கம்பேக் கொடுக்கிறார். இந்திய அணி பிளேயிங் லெவன் குறித்து பார்ப்போம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 05 2026, 02:47 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
இந்தியா, இங்கிலாந்து 3வது டி20 போட்டி
Image Credit : X/BCCI

இந்தியா, இங்கிலாந்து 3வது டி20 போட்டி

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர் ஒரு விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. முதல் போட்டி மழையால் ரத்து செய்யப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. இதனால், இந்திய அணி தற்போது தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது. இந்த இரண்டு அணிகள் இடையிலான 3வது டி20 போட்டி ஜூலை 7 ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற உள்ளது.

இந்தியா கட்டாயம் வெற்றி பெற வேண்டும்

ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இளம் இந்திய அணி, இந்தத் தொடரை வெல்லும் நம்பிக்கையை தக்கவைக்க வேண்டுமென்றால், மூன்றாவது போட்டியில் கட்டாயம் வென்றாக வேண்டும். ஒருவேளை இந்தப் போட்டியிலும் தோற்றால், தொடர் இங்கிலாந்து வசம் சென்றுவிடும். அப்படி தோற்கும் பட்சத்தில், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் மற்றும் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் அணி நிர்வாகம் குறித்து கேள்விகள் எழ வாய்ப்புள்ளது. இது அணியில் சில புதிய மாற்றங்களுக்கும் வழிவகுக்கலாம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
சூர்யகுமார் யாதவை தேடும் ரசிகர்கள்
Image Credit : Getty

சூர்யகுமார் யாதவை தேடும் ரசிகர்கள்

ஏற்கனவே, டி20 போட்டிகளில் சூர்யகுமார் யாதவை ரொம்பவே மிஸ் செய்வதாக ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகின்றனர். அவரை மீண்டும் அணிக்கு கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. அயர்லாந்துக்கு எதிரான தொடர் தோல்வியின் கசப்பான நினைவுகள் இன்னும் ரசிகர்கள் மனதை விட்டு அகலவில்லை. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது போட்டியிலும் இந்தியா தோற்றது ரசிகர்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. எனவே, மூன்றாவது போட்டியில் வெற்றி ஒன்றே அணிக்கு இருக்கும் ஒரே வழி.

இதையும் படிங்க: 2வது டி20 போட்டியில் இந்தியா தோல்விக்கான 5 காரணங்கள்! https://tamil.asianetnews.com/gallery/sports-cricket/ind-vs-eng-2nd-t20i-5-major-reasons-behind-indias-4-wicket-defeat-to-england-sff2983

Related Articles

Related image1
Ind Vs Eng: பெத்தேல் அதிரடியால் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து.. டி20 தொடரில் முன்னிலை..
Related image2
IND vs ENG T20: ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்? பரபரப்பு தகவல்!
35
இஷான் கிஷன் நீக்கம்; சஞ்சு சாம்சன் கம்பேக்
Image Credit : X/BCCI

இஷான் கிஷன் நீக்கம்; சஞ்சு சாம்சன் கம்பேக்

இந்த நிலையில், 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியில் 2 வீரர்கள் அதிரடியாக நீக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அதிரடி வீரர் இஷான் கிஷன் அயர்லாந்து தொடரில் சொதப்பினார். இதேபோல் இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ரன் அவுட் ஆன அவர், நேற்று 2வது டி20 போட்டியில் 40 பந்துகளில் 49 ரன்களே எடுத்து மந்தமாக ஆடினார். இதனால் இஷான் கிஷன் அதிரடியாக நீக்கப்படுகிறார். 2வது டி20 போட்டியில் நீக்கப்பட்ட தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 3வது டி20 போட்டியில் கம்கேப்க் கொடுக்கிறார்.

45
ரவி பிஷ்னோயும் அதிரடி நீக்கம்
Image Credit : bcci

ரவி பிஷ்னோயும் அதிரடி நீக்கம்

அபிஷேக் சர்மாவும், வைபவ் சூர்யவன்ஷியும் ஓப்பனிங்கில் களமிறங்குவார்கள். சஞ்சு சாம்சன் ஒன்டவுனில் பேட்டிங் செய்வார். இதேபோல் 2வது டி20 போட்டியில் மிக மோசமாக பந்துவீசிய ரவி பிஷ்னோய் 4 ஓவர்களில் 60 ரன்களை வாரி வழங்கினார். அவரின் ஒரே ஓவரில் இங்கிலாந்து அணி 3 சிக்சர்களுடன் 29 ரன்கள் விளாசியது. 

இந்த ஓவர் தான் இந்தியா தோற்க முக்கிய காரணமாகவும் விளங்கியது. இதனால் 3வது டி20 போட்டியில் ரவி பிஷ்னோய் அதிரடியாக நீக்கப்படுகிறார். இவருக்கு பதிலாக வாஷிங்டன் சுந்தர் அல்லது அயர்லாந்துக்கு எதிராக அறிமுகமான சூர்யான்ஷ் ஷெட்ஜே களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.

இதையும் படிங்க: சச்சின் சாதனையை முறியடித்த வைபவ் சூர்யவன்ஷி: https://tamil.asianetnews.com/sports-cricket/15-year-old-vaibhav-sooryavanshi-breaks-sachin-tendulkars-record-on-india-debut-articleshow-biciw8c

55
இந்திய அணி பிளேயிங் லெவன்
Image Credit : X/BCCI

இந்திய அணி பிளேயிங் லெவன்

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டிக்கான இந்திய அணியின் உத்தேச பிளேயிங் லெவன்: ஷ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), அபிஷேக் சர்மா, வைபவ் சூர்யவன்ஷி, சஞ்சு சாம்சன், திலக் வர்மா, ஷிவம் துபே, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர் அல்லது சூர்யான்ஷ் ஷெட்ஜே, ஹர்சித் ராணா, அர்ஷ்தீப் சிங் மற்றும் வருண் சக்கரவர்த்தி.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
இந்திய கிரிக்கெட் அணி
விளையாட்டு
சஞ்சு சாம்சன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
IND vs ENG 2nd T20: இந்த 2 வீரர்கள் வேஸ்ட்! ஒரே ஓவரில் மாறிய மேட்ச்! இந்தியா தோல்விக்கான 5 காரணங்கள்!
Recommended image2
Ind Vs Eng: பெத்தேல் அதிரடியால் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து.. டி20 தொடரில் முன்னிலை..
Recommended image3
Vaibhav Sooryavanshi: கேப் வாங்கியதும் கண்ணீர் விட்ட வைபவ் சூர்யவன்ஷி; வைரலாகும் போட்டோஸ்
Related Stories
Recommended image1
Ind Vs Eng: பெத்தேல் அதிரடியால் இந்தியாவுக்கு ஷாக் கொடுத்த இங்கிலாந்து.. டி20 தொடரில் முன்னிலை..
Recommended image2
IND vs ENG T20: ஹர்சித் ராணாவுக்காக மூத்த வீரரை அசிங்கப்படுத்திய கவுதம் கம்பீர்? பரபரப்பு தகவல்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved