தென்னாப்பிரிக்க அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் ஆடவுள்ளது. ஜனவரி 26ம் தேதி முதல் டெஸ்ட் போட்டி தொடங்குகிறது. முதல் டெஸ்ட் கராச்சியிலும் 2வது டெஸ்ட் ராவல்பிண்டியிலும் நடக்கவுள்ளது. 

இந்நிலையில், அந்த தொடருக்கான பாகிஸ்தான் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணியில் மிகச்சிறந்த இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான முகமது ரிஸ்வான், ஃபவாத் ஆலம், அபித் அலி, இம்ரான் பட், முன்னாள் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, யாசிர் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, ஹசன் அலி, ஃபஹீம் அஷ்ரஃப் ஆகிய வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.

டெஸ்ட் தொடர் தோல்விகளை சந்தித்துவரும் பாகிஸ்தான் அணிக்கு சொந்த மண்ணில் நடக்கும் இந்த தொடர் மிக முக்கியமானது. 

பாகிஸ்தான் டெஸ்ட் அணி:

பாபர் அசாம்(கேப்டன்), முகமது ரிஸ்வான்(விக்கெட் கீப்பர்), அபித் அலி, இம்ரான் பட், அசார் அலி, ஃபவாத் ஆலம், சர்ஃபராஸ் அகமது, ஃபஹீம் அஷ்ரஃப், யாசிர் ஷா, ஷாஹீன் அஃப்ரிடி, அப்துல்லா ஷாஃபிக், அகா சல்மான்,  சௌதி ஷகீல், காம்ரான் குலாம், சஜித் கான், டபீஷ் கான், ஹாரிஸ் ராஃப், முகமது நவாஸ், நௌமன் அலி, ஹசன் அலி.