Asianet News TamilAsianet News Tamil

பிரதமர் பேச்சையே மதிக்காத பாகிஸ்தான் கேப்டன்

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை விட, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான். 
 

pakistan skipper sarfaraz did not respect prime minister imran khan words
Author
England, First Published Jun 17, 2019, 2:20 PM IST

உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள இரு அணிகளாக கருதப்படும் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான போட்டியை விட, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட போட்டி இந்தியா - பாகிஸ்தான் போட்டி தான். 

ஆனால் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டி பரபரப்பே இல்லாமல் ஒருதலைபட்சமான போட்டியாகவே முடிந்துவிட்டது. 337 ரன்களை குவித்த இந்திய அணி, வெறும் 212 ரன்களுக்கு சுருட்டி டி.எல்.எஸ் முறைப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க கண்டிப்பாக வெற்றி பெற்றே தீர வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணியை எதிர்கொண்ட பாகிஸ்தான் அணி, பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்திலுமே சொதப்பி தோல்வியை தழுவியது. 

pakistan skipper sarfaraz did not respect prime minister imran khan words

இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக பாகிஸ்தான் பிரதமரும் பாகிஸ்தான் அணிக்கு உலக கோப்பையை வென்றுகொடுத்த முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான், டாஸ் வென்றால் பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். ஆடுகளம் ஈரப்பதமாக இருந்தால் பவுலிங் தேர்வு செய்யலாம். இல்லையென்றால், டாஸ் வென்றால் முதலில் பேட்டிங் தான் ஆட வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார். 

இம்ரான் கான் பிரதமர் மட்டுமல்ல; பாகிஸ்தான் அணிக்கு 1992ல் உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன். அவர் சிறந்த ஆல்ரவுண்டர். உலக கோப்பையை வென்று கொடுத்த கேப்டன் என்பதற்காகவோ பாகிஸ்தானின் பிரதமர் என்பதற்காகவோ அவரது பேச்சை அப்படியே கேப்டன் கேட்கவேண்டும் என்பதில்லை. அணி சார்பில் திட்டங்கள் இருக்கும். ஆனாலும் கூட நல்ல பயனுள்ள ஆலோசனைக்கு செவி மடுக்கலாம். 

pakistan skipper sarfaraz did not respect prime minister imran khan words

உலக கோப்பை போன்ற பெரிய தொடர்களில் நெருக்கடியான மற்றும் முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடுவதே சிறந்தது. அதுவும் பாகிஸ்தான் அணிக்கு அதுதான் சிறந்தது. ஏனெனில் எதிரணி(குறிப்பாக இந்திய அணி) பெரிய இலக்கை நிர்ணயித்துவிட்டால் அந்த நெருக்கடியிலேயே பாகிஸ்தான் வீரர்கள் சொற்ப ரன்களுக்கு அவுட்டாகிவிடுவார்கள். ஆனால் முதலில் பேட்டிங் ஆடினால் நெருக்கடி இல்லாமல் ஆடலாம். 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதி போட்டியில் இந்திய அணியை வீழ்த்தியபோது கூட பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் தான் ஆடியது. 

அப்போது டாஸ் வென்ற இந்திய கேப்டன் கோலி, பாகிஸ்தானை முதலில் பேட்டிங் ஆட பணித்தார். அதுதான் தவறான முடிவாகிப்போனது. அதேபோல அதே தவறை இந்த போட்டியில் சர்ஃபராஸ் செய்தார். முதல் பேட்டிங் ஆடியிருந்தால் மட்டும் பாகிஸ்தான் ஜெயித்திருக்கும் என்று அர்த்தமில்லை. ஆனால் படுமோசமாக தோற்றிருக்காது. இந்திய அணிக்கு ஒருவேளை நெருக்கடி கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் இந்திய அணியை முதலில் பேட்டிங் ஆடவிட்டதால், போட்டி தொடங்கிய கொஞ்ச நேரத்திலேயே ரிசல்ட் தெரிந்துவிட்டது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios