Pakistan vs South Africa: டீசண்டான ஸ்கோரை எட்டிய பாகிஸ்தான்; கடைசில கை கொடுத்த சவுத் சகீல், ஷதாப் கான்!

தென் ஆப்பிரிக்காவிற்கு எதிரான 26ஆவது லீக் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 270 ரன்கள் எடுத்துள்ளது.

Pakistan Scored 270 Runs against South Africa in 26th Match of  Cricket World Cup at MA Chidambaram Stadium, Chennai rsk

பாகிஸ்தான் மற்றும் தென் ஆப்பிரிக்கா இடையிலான 26ஆவது லீக் போட்டி தற்போது சென்னையில் நடந்து வருகிறது. சென்னை, எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடக்கும் 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பையின் கடைசி போட்டி இதுவாகும். இதில், டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் பேட்டிங் செய்தார். அதன்படி பாகிஸ்தான் முதலில் பேட்டிங் செய்தது. இதில், தொடக்க வீரராக களமிறங்கிய அப்துல்லா ஷபீக் 9 ரன்களில் வெளியேறினார். அடுத்து மற்றொரு தொடக்க வீரர் இமாம் உல் ஹக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

Hangzhou Asian Para Games: நீளம் தாண்டுதலில் இந்தியாவிற்கு 25ஆவது தங்கம் பெற்று கொடுத்த தர்மராஜ் சோலைராஜ்!

அதன் பிறகு பாபர் அசாம் மற்றும் முகமது ரிஸ்வான் இருவரும் இணைந்து நிதானமாக விளையாடினர். இதில், ரிஸ்வான் 31 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்தப் போட்டியில் ரிஸ்வான் 13 ரன்கள் எடுத்ததன் மூலமாக ஒரு நாள் போட்டிகளில் 2000 ரன்களை கடந்துள்ளார். அடுத்து வந்த இப்திகார் அகமது 21 ரன்களில் நடையை கட்டினார். இவரைத் தொடர்ந்து பாபர் அசாம் 3ஆவது முறையாக அரைசதம் அடித்தார். இதற்கு முன்னதாக, இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார்.

Pakistan vs South Africa: சென்னையில் நடக்கும் கடைசி போட்டி: ஹாட்ரிக் தோல்வியை தவிர்க்குமா பாகிஸ்தான்?

கடந்த 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளில் தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக பாபர் அசாம், 69(80), 103(104), 31(33), 94(82), 50(65) என்று ரன்கள் அடித்துள்ளார். இறுதியாக பாபர் அசாம் 65 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸர் உள்பட 50 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இவரைத் தொடர்ந்து வந்த ஷதாப் கான் மற்றும் சவுத் சகீல் இருவரும் ஓரளவு ரன்கள் சேர்த்தனர். மேலும், இருவரும் நிதானமாக விளையாடியதன் மூலமாக பாகிஸ்தான் 200 ரன்களை கடந்தது.

India vs England 29th Match: பும்ரா இடது கையிலும், ஜடேஜா, குல்தீப் யாதவ் வலது கையிலும் பந்து வீசி பயிற்சி!

இதில் ஷதாப் கான் 43 ரன்களில் ஆட்டமிழக்க அடுத்து சவுத் சகீல் 52 ரன்களில் வெளியேறினார். அடுத்து முகமது நவாஸ் 24 ரன்கள் சேர்க்கவே பாகிஸ்தான் கடைசியாக 270 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இன்னும் 20 பந்துகள் இருந்த நிலையில், பாகிஸ்தான் ஆல் அவுட்டானது என்பது குறிப்பிடத்தக்கது. பவுலிங்கைப் பொறுத்த வரையில் தென் ஆப்பிரிக்கா அணியில் தப்ரைஸ் ஷம்சி 4 விக்கெட்டுகளும், மார்கோ யான்சென் 3 விக்கெட்டுகளும், கெரால்டு கோட்ஸீ 2 விக்கெட்டுகளும், லுங்கி நிகிடி ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

Hangzhou Asian Para Games 2022: 1500மீ தடகளப் போட்டியில் ராமன் சர்மா தங்கம் வென்று அசத்தல்!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios