Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தானின் மொக்க ஃபீல்டிங்கால் தப்பிய ரோஹித்.. 2 ரன் அவுட் சான்ஸை தவறவிட்ட பாகிஸ்தான்

மான்செஸ்டரில் நடந்துவரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் ரோஹித் சர்மா - ராகுல் தொடக்க ஜோடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். 
 

pakistan missed run out chance for rohit sharma
Author
England, First Published Jun 16, 2019, 4:48 PM IST

மான்செஸ்டரில் நடந்துவரும் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிவரும் இந்திய அணியின் ரோஹித் சர்மா - ராகுல் தொடக்க ஜோடி அபாரமான தொடக்கத்தை அமைத்து கொடுத்துள்ளனர். 

உலக கோப்பை தொடரின் இன்றைய போட்டியில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் ஆடிவருகின்றன. மான்செஸ்டாரில் நடந்துவரும் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் சர்ஃபராஸ் அகமது, இந்திய அணியை முதலில் பேட்டிங் செய்ய பணித்தார். 

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித்தும் ராகுலும் களமிறங்கினர். ராகுல் நிதானமாக தொடங்க, ரோஹித் சர்மாவோ தொடக்கத்திலேயே அதிரடியாக ஆடினார். வழக்கமாக தவான் அதிரடியாக ஆட, ரோஹித் களத்தில் நிலைக்க நேரம் எடுப்பார். ஆனால் தவான் இல்லாததால், அவரது பணியை கையில் எடுத்த ரோஹித் அதிரடியாக ஆட, மறுமுனையில் ராகுல் நிதானமாக தொடங்கினார்.

pakistan missed run out chance for rohit sharma

ஹசன் அலி வீசிய ஆறாவது ஓவரிலேயே தனது டிரேட்மார்க் புல் ஷாட்டின் மூலம் சிக்ஸர் விளாசிய ரோஹித், தொடர்ந்து அதிரடியாகவே ஆடிவருகிறார். 34 பந்துகளில் 6 பவுண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் அரைசதம் அடித்தார். அரைசதத்துக்கு பிறகு ரோஹித் சர்மா தொடர்ந்து அதிரடியாக ஆட, மறுமுனையில் நிதானமாக ஆடிக்கொண்டிருந்த ராகுலும் அதிரடியை தொடங்கினார். 

ரோஹித்தை தொடர்ந்து ராகுலும் அரைசதம் அடித்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 136 ரன்கள் சேர்த்தனர். அரைசதம் அடித்த ராகுல் 57 ரன்களில் ரியாஸ் பந்தில் ஆட்டமிழந்தார். ரோஹித்தின் விக்கெட்டையும் முன்னாடியே வீழ்த்தியிருக்கலாம். ஆனால் பாகிஸ்தான் அணி மொக்கையான ஃபீல்டிங்கால் தவறவிட்டது. பொதுவாகவே செம மொக்கையாக ஃபீல்டிங் செய்யும் பாகிஸ்தான் வீரர்கள், இன்றைய போட்டியிலும் ஃபீல்டிங்கில் சொதப்பினர். 

pakistan missed run out chance for rohit sharma

ரோஹித்-ராகுல் ஜோடியை 10வது ஓவரிலேயே பிரித்திருக்கலாம். ஆனால் ரன் அவுட் வாய்ப்பை தவறவிட்டனர். 10வது ஓவரின் முதல் பந்தை ராகுல் அடித்தார். அதற்கு ஒரு ரன் ஓடி முடித்தபிறகு, இரண்டாவது ரன் ஓடுவதற்காக ரோஹித் பாதி பிட்ச்சிற்கு வந்துவிட்டார். ஆனால் ராகுல் வேண்டாம் என்று மறுத்ததை அடுத்து மீண்டும் பேட்டிங் கிரீஸை நோக்கி ஓடினார். இதற்கிடையே பந்தை பிடித்த ஷோயப் மாலிக், ரோஹித்தை டார்கெட் செய்து விக்கெட் கீப்பரிடம் வீசாமல் பவுலிங் முனைக்கு த்ரோ அடித்தார். அதனால் ரோஹித் தப்பினார். விக்கெட் கீப்பரிடம் மாலிக் சரியாக வீசியிருந்தால், ரோஹித்துக்கு கிரீஸை அடைய டைமிங் கிடைத்திருக்காது. ஏனெனில் பாதி பிட்ச்சிலிருந்து திரும்பி ஓடினார். கரெக்ட்டாக த்ரோ அடித்திருந்தால் ரோஹித்தை அவுட்டாக்கியிருக்கலாம். 

ஆனால் அந்த ரன் அவுட் வாய்ப்பை பாகிஸ்தான் அணி தவறவிட்டது. அதன்பின்னர் மீண்டும் கிடைத்த ரன் அவுட் வாய்ப்பையும் ரொம்ப மோசமான த்ரோவால் தவறவிட்டது. அதுவும் ரோஹித் மாதிரியான வீரருக்கு இதுபோன்ற ரன் அவுட்டை மிஸ் செய்வது மிகப்பெரிய தவறு. ராகுல் அவுட்டாகிவிட்டாலும் கூட, ரோஹித் சர்மா சதத்தை நோக்கி ஆடிவருகிறார். 
 

Follow Us:
Download App:
  • android
  • ios